இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு: தமிழகத் தலைவர்கள் கண்டனம்

 

சென்னை, ஜன.9- இலங்கையில் யாழ்ப் பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க் கால் நினைவுத் தூண் அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணை இடிக் கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க் கால் நினைவுத் தூண் நள்ளிரவில் இடிக் கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதன்மூலம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித உணர்வுகளை நசுக் குவதாக இலங்கை அரசின் அதிகார ஆணவச் செயலுக்கு,  தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின், .தி.மு..  பொதுச் செயலாளர்  வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர்

தளபதி மு..ஸ்டாலின் கண்டனம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வர் திமுக தலைவர்  தளபதி மு.. ஸ்டாலின் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:  ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கெனவே சிதைக்கப்பட்டு  அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலையில் முள்ளிவாய்க் கால் நினைவுத் தூணும் இடிக் கப்பட்டு உள்ளது, மிகுந்த கவலைக் கும், கடும் கண் டனத்திற்கும் உரி யதாகும்! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பிய வுடன், இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தி ருப்பதை, பிரதமர் மோடி அவர்கள் கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர் களின் எதிர்பார்ப்பு ஆகும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

வைகோ இன்று (9.1.2021)) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

 "இலங்கைத் தீவில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் ராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படு கொலை செய்த சிங்கள அரசு, படு கொலையின் அடை யாளங் கள் கூட இருக் கக் கூடாது என் பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப் போது யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை இடித் துள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

இலங்கைத் தீவில் கோத்தபய ராஜ பக்சவின் அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்".

இவ்வாறு .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வி.சி.. தலைவர்

தொல்.திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தனது டுவிட்டர் பக் கத்தில் குறிப் பிட்டுள்ளதாவது: 

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கல் நினைவுச்  சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச் சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம்; தமிழர் அடையாளர் காப்போம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

Comments