இந்துத்துவாவை நுழைக்க முயன்ற தந்திரங்கள் தோல்வி! தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் தேவை!

 'இந்து' என்.ராம் பேச்சு!

நீலகிரி,ஜன.9- மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு இந்துத்துவாவை தமிழகத்திற்குள் நுழைக்க செய்யப்பட்ட தந்திரங்கள் தோல்வி கண்டிருப்பதாகவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயமாகத் தேவை என்றும் இந்து என்.ராம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களின் 300 ஆண்டு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நீலகிரி ஆவண காப்பகம் சார்பில் உதகையில் படுகர் சமுதாய மக்களின் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.. துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான .இராசா, 'இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய காலண்டரை வெளியிட்டனர். அப்போது பேசிய இந்து என்.ராம், தமிழகத்திற்குள் இந்துத்துவாவை நுழைக்க மேற்கொள்ளப் பட்ட தந்திரங்கள் தோல்வி கண்டி ருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் தேவை எனவும் அவர் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய .ராசா, தங் களுக்கு என தனி பாரம்பரியம், கலாச் சாரத்துடன் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பெண்களுக்கு சம உரிமை அளித்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை நீலகிரி ஆவண காப்பக மய்யத்தின் நிறுவனர் வேணுகோபால் செய்திருந்தார். இதில் தி.மு.. மாவட்டச் செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் .ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல சமுதாய மக்கள் பங்கேற்றனர்

Comments