பிரெய்லி வடிவில் சுகாதார நெறிமுறைகள் வெளியீடு பார்வையற்றோருக்கு கரோனா விழிப்புணர்வு மருத்துவ நிபுணர் டி.எஸ். சந்திரசேகர் தகவல்

சென்னை, ஜன.5 பார்வையற்றோருக்காக பிரெய்லி வடிவில் கரோனா விழிப்புணர்வு நெறிமுறைகள் சென்னையில் திங்கள் கிழமை  (4.1.2021) வெளியிடப்பட்டன.

சென்னை மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அந்த பிரெய்லி நெறிமுறைகளானது முதல் கட்டமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, மேலும் 10 மொழி களில் அவற்றை வெளியிட்டு நாடு முழுவ தும் உள்ள பார்வைத் திறனற்றோருக்கு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெடிந்தியா மருத்துவ மனைத் தலைவரும், ஜீரண மண்டல சிறப்பு நிபுணருமான மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கல்வி யாளர் லூயிஸ் பிரெய்ல் என்பவர் பார்வை யற்றோருக்காக கண்டறிந்த உன்னத எழுத்து முறைதான் பிரெய்லி, இன்றளவும் விழியிழந்த மாற்றுத் திறனாளிகள் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்க அதுவே முக்கியக் காரணம்.

அத்தகைய சிறப்பு மிக்க பெருமைக்குச் சொந்தக்காரரான லூயிஸ் பிரெய்ல் 1809-ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பிறந்தவர். அவரது பிறந்தநாளைப் போற்றும் வித மாகவும், கரோனா காலத்தில் பார்வையற்ற வர்களுக்கு ஏதேனும் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும் பிரெய்லி விழிப்புணர்வு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம்.

முகக் கவசம், தனி நபர் இடைவெளி, தனி நபர் சுகாதாரம் என 7 வகையான விழிப்புணர்வு வழிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் துணையுடன் நாடு முழுவதும் அதனைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழிலும், ஆங்கிலத்திலும் கரோனா விழிப்புணர்வு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் மலை யாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா, இந்தி, உருது, மராத்தி குஜராத்தி, வங்காளம், அசாமி ஆகிய மொழிகளிலும் அதனை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.  இந்தியாவில் மட்டும் 34 லட்சம் பார் வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அந்த எண் ணிக்கை 4 லட்சமாக உள்ளது என்றார் அவர்.

Comments