யாழ்பாணப் பல்கலைக் கழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணை இடித்த இலங்கை அரசின் பேரினவாத செயல் : தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஜன.10- இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்  இடிக்கப்பட்டதைக் கண்டித்து தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

இலங்கையில் உள்ள யாழ் பாண பல்கலைக் கழக வளாகத்தில் தமிழர்கள் முயற்சியில் எழுப்பப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் - நினைவு முற்றத்தை சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம்  இரவு நேரத்தில்  கோழைத்தனமாக தகர்த்திருப்பதை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் விடுதலைப் போராட்டத் திலும், சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற் றிலும் தமிழர்கள் நிராகரிக்க முடியாத பங்களிப்பு ஊடும், பாவுமாக பிணைந்து வருகிறது. இதில் தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டதால் முரண் பாடுகளும், மோதல்களும் தொடர்கின்றன.

இறையாண்மை கொண்ட தேசத்தில் அனைத்து உரிமைகளையும் பெற்று கண்ணியமாக வாழும் உரிமைக்காக போராடி வரும் தமிழர்களின் கோரிக்கைகள் மீது அரசியல் ரீதியான தீர்வுகாணும் வரை போராட்ட வேட்கை தணியாது என்பதை பேரினவாத அரசு உணர வேண்டும்.

யாழ்பாண பல்கலைக் கழகத்தில் இலங்கை ராணுவம் மேற்கொண்டிருக்கும் இழி செயலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்து, இடிக்கப்பட்ட நினைவு முற்றத்தை உடனடியாக இலங்கை அரசு கட்டியமைக்க வலியுறுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயலாளர்

இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரில் உயிரிழந்த தமி ழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு வன்மை யான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூண் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த செயல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் இந்த இழி செயலுக்கு துணைபோயுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மையுள்ள விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியு றுத்தி வந்துள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியின் போதும், இப்போதைய ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியின் போதும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை இவ்வாறு கூறியுள்ளார்.

.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்

தமிழ் இனப்படுகொலையை பிரதிபலிக்கும் முகமாக யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க் கால் நினைவுச்சின்னத்தை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன் மையாக கண்டிக்கிறது. சிங்கள பேரினவாத அரசின் இந்த நட வடிக்கை, தமிழர் இன அழிப்பு போர் இன் னும் முடிய வில்லை என்பதை தான் வெளிப்படுத் துகிறது. 

சிங்கள பேரினவாத அரசின் இந்த செயல், ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந் தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் கல்லறையே இருக்க கூடாது என்று நினைக்க கூடிய சிங்கள பேரினவாத அரசு, அங்கு தமிழர்களை சுதந்திரமாக இருக்க விடுமா என்பதை, சிங்கள அரசுக்கு வாக்கலத்து வாங்கியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் ராஜபக்சே ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும், தமிழர்களுக்கு நிலையான வாழ்வும், சுதந்திரமும் கிடைக்காது இவ்வாறு கூறியுள்ளார்.

வி.எம்.எஸ்.முஸ்தபா

தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மாநில தலைவர்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத் தினை பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று (8.1.2021) இரவோடு இரவாக இடித்து அழித்தது. இதனை அறிந்த மாணவர்கள், தமிழர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாழ் பல் கலைக்கழகத்தின் முன் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இலங்கை காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரின் துணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவிடம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு முதல் மாணவர்கள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் 13ஆவது சட்டத் திருத்தத்தினை அமல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்க வாய்ப்பு உருவாகும் என இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தநிலையில், அவர் இலங்கையில் இருக்கும்போதே போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவுச் சின்னம் இடிக்கப் பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments