புதுச்சேரியை உலுக்கிய பெரியார் - அம்பேத்கர் கைத்தடி பேரணி

புதுச்சேரி, ஜன. 6- புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் புதுச் சேரியில் உள்ள அனைத்து பெரியாரிய இயக்கங்கள், மாணவர்கள் கூட்டமைப்பு மனித உரிமை இயக்கங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை ஒருங்கி ணைத்து மாபெரும் பேரணி நடைபெற்றது.

பெரியார் - அம்பேத்கர் கைத்தடி பேரணி புதுச்சேரி சிங்காரவேலன் சிலை அருகில் பெரியார் திடலில் இருந்து கைத்தடியுடனும், பெரியார், அம்பேத்கர் படங் களை முகத்திரையாக அணிந்து கொண்டு 25.12.2020 அன்று மாலை 4 மணிக்கு புறப் பட்டது. பறை இசையுடனும், வீர விளையாட்டுகளுடனும் துவங்கிய இப்பேரணியை பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் தோழர் தீனா தலைமை ஏற்று வழிநடத்தினார்.

பேரணியை கோவை நிகர் கலைக்கூடம் தோழர் சி.சந் திரா தொடங்கி வைத்தார். சகோதரன் சமூக நல மேம் பாட்டு நிறுவனத் தலைவர் தோழர் .ஷீத்தல் முன்னிலை வகித்தார். பேரணி தொடக்க வுரையை ஆதி திராவிடர் மற் றும் பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு (காரைக்கால்) தோழர் வழக்குரைஞர் வின் சென்ட்ராஜ், தமிழக மக்கள் உரிமைக் கழகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தமிழக துணைப் பொதுச் செயலாளர் வழக் குரைஞர் தோழர் .தயாநிதி, புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகி யோர் உரையாற்றினர்.

தத்துவ தலைவர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் ஜாதி, மதம், கடவுள், பெண்ணடி மையை ஒழித்து சமூகநீதியை வென்றெடுப்போம் என சூளுரைத்து எழுச்சியுடன் முழக்கங்களை முழங்கினர். இறுதியாக தந்தை பெரியார் சிலை அருகில் பேரணி முடி வடைந்தது. ஊர்வலம் பெரியார் திடலில் தொடங்கி மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக சாரம் பெரி யார் சிலை வரை பேரணியாக வந்தது. எழுச்சியுடன் நடை பெற்ற ஊர்வலத்தில் பொது மக்களும் திரண்டு கலந்து கொண்டனர். பட்டையும் கொட்டையுமாய் வந்தவர் களும் இந்துத்துவா எதிர்ப்பு முழக்கமிட்டது குறிப்பிடத் தக்கது.

Comments