நகர சுத்தித் தொழிலாளர்களின் தலையில் கைவைப்பதா?

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள  அறிக்கை

சென்னை மாநகராட்சியில் நகர சுத்தித் தொழி லாளர்கள் கரோனா கொடும் தொற்று நோய்க் காலத்திலும் உயிரைப் பணயம் வைத்துப் பணி யாற்றிவருபவர்கள்.

அவர்களின் பணி என்பது அடிப்படைச் சுகாதாரப் பணியாகும். சமூகத்திலும் அடித்தட்டில் கிடந்து உழலக் கூடியவர்கள்.

சென்னை மாநகராட்சி நகர சுத்தித் தொழில் பணியை சில வட்டங்களில் தனியாரிடம் ஒப்படைத்த நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற் றியவர்கள்கூட பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா காலத்தில் வேலை வாய்ப்பு என்பது குதிரைக் கொம்புதான் என்ற நிலையில், ஏற்கெனவே பணியாற்றியவர்களைப் பணி நீக்கம் செய்வது மனிதாபிமானமற்ற செயல் - தொழிலாளர் விரோதக் கொள்கையாகும்.

அந்தக் குடும்பங்கள் அடுத்தவேளை உணவுக்கு எங்கே செல்லுவார்கள்?

சென்னை மாநகராட்சியின் இந்த ஆணை பின்வாங்கப்படவேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர்களைக்கூட சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் திடீர் என்று வேலை நீக்கம் செய்வதை எந்த வகையிலும் ஏற்க

முடியாது.

முதலமைச்சர் இதில் தலையிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட 5000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

11.1.2021

Comments