செய்தியும், சிந்தனையும்....!

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அதிகமே!

நீதியை நிலைநாட்ட தி.மு.. சட்டத் துறை தனது பணியைத் தொய்வின்றி செய்யவேண்டும்: - தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின்

ஆமாம், நாட்டில் சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுதானே கிடக்கிறது!

ஆஸ்திரேலி யாவிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்காரர் முகம்மது சிராஜ்மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி சாடல்.

, ஆர்.எஸ்.எஸ். காவிகள் ஆஸ்திரேலியா வரை ஊடுருவி விட்டார்களோ?

காலத்தின் குறி?

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த முயன்றதால் அரியானா முதலமைச்சர் பேசவிருந்த மேடையை விவசாயிகள் சூறையாடினர்.

வன்முறை கூடாததுதான் - அதேநேரத்தில், வன்முறைக்குக் காரணம் என்னவென்பதும் யோசிக்கப்பட வேண்டிய ஒன்றே!

Comments