மூன்று நூல்கள் வெளியீடு - 50 நூல் தொகுப்பு விற்பனை
குடியாத்தம் ஜன. 12- குடியாத்தம் புவ னேசுவரிப்பேட்டை, போடி பேட்டை சாலை பெரியார் அரங்கத்தில் 2.12.2020 அன்று காலை 10.30 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகசிறப்பாக கொண் டாடப்பட்டது.
இந்த
விழாவிற்கு மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி தலைமை
தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச.கலைவாணி வரவேற்புரையாற்றினார்.
மாநில
மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி தொடக்கவுரை
ஆற்றி னார். குடியாத்தம் ஒன்றிய மகளிர் பாசறை ச.வசுமதி இணைப்புரையாற்
றினார். ‘’ஒப்பற்ற தலைமை” என்ற நூலை வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் வெளியிட்டார்,
தி.மு.க நகர
பொறுப்பாளர் எஸ். சவுந்தர்ராஜன் அந்த நூலை பெற்றுக்கொண்டார். ‘’வாழ்வியல் சிந்தனைகள்” என்ற நூலை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மா. அழகிரிதாசன் வெளியிட்டார், அந்த நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் கு.குமரேசன் பெற்றுக்கொண்டார்.
‘’ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்‘’ என்ற நூலை வேலூர் மாநகர கழக தலைவர் உ.விஸ்வநாதன் வெளியிட்டார்,
அந்த நூலை தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட துணை செயலாளர் கவிஞர் சகுவரதன் பெற்றுக்கொண்டார்.
‘’வாழ்வியல்
சிந்தனைகள்” நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் நீல.சந்திரகுமார் அவர்களும், ‘’ஒரு மார்க்சிஸ்ட் பார்வை யில் திராவிடர் கழகம்“ நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் கள் சங்கம் மாவட்ட தலைவர் கவிஞர் முல்லைவாசன் அவர்களும், ‘’ஒப்பற்ற தலைமை” நூலை தி.மு.க
தலைமை கழக பேச்சாளர் த.பாரி அவர்களும்
அறிமுக உரையாற்றினார்கள். வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா நன்றி
யுரையாற்றினார்.
நூல்களை
பெற்றுக்கொண்ட தோழர்கள்
சி.லதா - வி.இ.சிவக்குமார்
- 5, ந.தேன் மொழி - இர.அன்பரசன் - 5, ச.கலைவாணி - 5, சா.விமலா - சி.சாந்தகுமார் - 5, ச.ஈஸ்வரி - சடகோபன்
- 3, கு.இளங்கோவன் - 1, உ.விஸ்வநாதன் - 1, அ.மொ.
வீரமணி - 1, ந.சந்திரசேகரன் - 1, நீல.சந்திரகுமார்
- 1, சி.கலைவாணி - ரேவதி - 1, எஸ்.சவுந்தர் ராஜன் - 1, கவிஞர் முல்லைவாசன் - 1, கவி ஞர் சகுவரதன் - 1, வி.மோகன் - 1, இரம்யா
- கண்ணன் - 1, பி.ஏழுமலை த.மி.வா - 1, ச.வசுமதி - 1, குமரேசன் - 1, கனகராஜ் - 1, பாலசுப்பிரமணியம் - 1, விக்ரம் - 1, பி.தனபால் - 1, வெங்கட்ராமன்
- 1, மல்லிகா - சிவா - 1, சிவா பல்மருத்துவர் - 1, சுரேஷ் - 1, சுந்தரபாண்டியன் த.மி.வா
- 1.
தமிழர்
தலைவர் ஆசிரியர் பிறந்த நாளையொட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது.