ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கிக் கொள்ளும் பா.ஜ.க.

 

'தினமலர்' 10.1.2021 பக்கம் 6

பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டவர்கள் அதிமுகவினர் மட்டுமல்ல - பா...வினரும்தான் என்று கூறுகிறதா தினமலர்? வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் எடுத்த படத்தை எல்லாம் மறந்து விட்டது ஏன் என்று கேட்கிறதோ தினமலர்?

ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் உள்ள கோயிலில் 8 வயது சிறுமி  ஆசிபா ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பா... அமைச்சர்களும் ஈடுபட்டது எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கையில் விடுபட்டு விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Comments