தேனி அருகே முகநூலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்த இளைஞரை, நைசாக பேசி வரவழைத்து பொது இடத்தில் வைத்து பாடம் புகட்டிய பெண்ணின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முகநூலில் தனது பெயரில் கணக்கு வைத்துக் கொண்டு, பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக கொண்டவன் ராஜா. அவனது நட்பு அழைப்பை ஏற்காத பெண்களின் முகநூல் மூலமாக (மெசேஞ்சரில்) ஆபாசமாக பேசுவது, ஆபாசப் படங்களை அனுப்புவது என்று ராஜா செய்த சேட்டைகள் எண்ணிலடங்காதவை!
அந்தவகையில்
திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் தொல்லை கொடுத்து வந்துள்ள ராஜா பற்றி தனது தோழியான தேனி மாவட்டம் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழ்அரசியிடம், உங்கள் பகுதியைச் சேர்ந்த பையன் ஒருவன் முகநூலில் சேட்டை செய்கிறான் என்று தன் வேதனையைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து
தமிழரசி சம்பந்தப்பட்ட ராஜாவின் முகநூல் கணக்கில், 'மெசேஞ்சர்' மூலம், எந்த ஊரு என்று விசாரித்துள்ளார். ஆனால் ராஜாவோ, தமிழ்அரசியிடமும் தனது வழக்கமான ஆபாச 'சாட்டிங்' சேட்டையை ஆரம்பித்துள்ளான்.
முள்ளை
முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட தமிழ்அரசி, அவனை நேரில் சந்திக்க ஆவலாக இருப்பதாக கூற, எங்கு வர வேண்டும் என்று
வேகம் காட்டியுள்ளான்; அந்த 'மன்மத' ராசா தமிழ் அரசியை உப்புக்கோட்டை கிராமத்திற்கு வரச் சொன்னான். தனது கணவர் மற்றும் மகனுடன் அங்கு சென்றுள்ளார் தமிழரசி.
காதல்
ஆசையில் வேக வேகமாக வந்த ராஜா கையும் களவுமாக வீரப்பெண் தமிழரசியிடம் சிக்க, வீதியென்றும் பாராமல் துணிச்சலுடன் விளாசி எடுத்தார்.
அவனது
'பைக்சாவி' மற்றும் கைப்பேசியை வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வரச்சொல்லி அதிரடி காட்டினார் தமிழ் அரசி. அக்கம்
பக்கத்தினர், அப்பகுதியினர் என ஆளுக்கு ஒரு
அடியும், உதையுமாக தர்ம அடி கொடுத்தனர்.
நேரம்
செல்ல செல்ல பீதியடைந்த அந்தக் கயவன் தமிழ் அரசியின் காலில் விழுந்ததோடு, இனி வாழ்நாளில் பெண்களிடம் இது போன்று தவறாக நடந்து கொள்ள மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டான்.
இதையடுத்து
அவனை மன்னித்து அங்கிருந்து விரட்டி விட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் தமிழ்அரசி முடிவு செய்துள்ளார்.
ஆபாசப்
படங்கள், மற்றும் ஆபாச காணொலிகள் இருப்பதாக யாராவது மிரட்டினாலோ, அல்லது ஆபாசமாக 'சாட்டிங்' செய்தாலோ, காவல்துறையில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே
நேரத்தில் முகநூலில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
என்று பொழுதைக் கழிக்கும் காமுகர் களுக்கு இந்த நிகழ்வு ஒரு எச்சரிக்கைப் பாடம்..!
வெளியில்
சொல்ல வெட்கப்பட்டும், தனக்கு அவப்பெயர் வரும் என்று அஞ்சியும் பெண்கள் ஒதுங்க
ஒதுங்க, ஓடியவனைக் கேட்டால் விரட்டுபவ னுக்கு உற்சாகம் - லாபம் என்ற நிலைதான் ஏற்படும்.
இந்த
வகையில் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழரசி எடுத்துக்காட்டான "தமிழச்சியாக" வந்திருக் கிறார். பெயருக்கேற்ற வீரத்தை விவேகத்தோடு அரங்கேற்றிய தமிழரசியைப் பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்.
தங்களிடம்
சேட்டை செய்தால் அவர்களின் வாலை அறுக்கும் போர் வாளாகப் பெண்கள் பொங்கி எழுக! தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு மற்ற மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டட்டுமே!