டில்லியில் சாந்தினி சவுக் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அனுமன் கோவில் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தகர்ப்பு

புதுடில்லி,ஜன.6- டில்லியில் சாந்தினி சவுக் பகுதியை அழகுபடுத்தும் பணிகளில் ஒன்றாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அனுமன் கோவிலை இடிக்கத் தீர்மானிக்கப்பட்டது

ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட  கோயில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கத் தீர்மானிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.  அதனைத் தொடர்ந்து அனுமன் கோவில் டில்லி வடக்கு மாநகராட்சியால் இடிக்கப்பட்டுள்ளது. 

டில்லியில் மாநில அரசாக ஆம் ஆத்மி அரசு இருப்பினும், மாநகராட்சி தற்போது பாஜகவின் ஆளுமையில் உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமன்கோயில் அகற்றப்பட்டுள்ளது.

விசுவ இந்து பரி‌‌ஷத் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று (5.1.2021) பேரணியாக அந்த பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி இந்து அமைப்புகளை சேர்ந்த 27 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Comments