எவ்வித விசாரணையுமின்றி நீண்ட காலம் சிறையில் வாடுவோர்க்குப் பிணை மறுக்கப்படலாமா?

கவுதம் பாடியா

குறைகள் மலிந்த மனுக்களை இரவோடிரவாகப் பட்டியலிட்ட இந்திய உச்ச நீதிமன்றம்  தொலைக் காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அர்ணாப் கோஸ் வாமிக்கு நவம்பர் மாத தொடக்கத்தில்   பிணை அளித்தது. பின்னர் நவம்பர் 27 அன்று அளிக்கப்பட்ட அந்த வழக்கின்  தீர்ப்பின் ஒரு பகுதியாக மனித சுதந்திரம் மற்றும் நீதிமன்றங்களின் பங்களிப்பும்  என்ற தலைப்பில்  சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமை என்ற ஆணை அரசமைப்பு சட்டத்தினூடே நெடுகிலும் ஊடுருவி இழையோடிக் கொண்டிருப்ப தாகும் என்பதாலும்  குடிமக்களைக் குறி வைத்துத் தேர்ந்தெடுத்து துன்புறுத்துவதற்கு ஒரு கருவியாக குற்றவியல் சட்டம் ஆகிவிடாமல் இருப்பதை நாடெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், குடிமக்களின் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு எதிரான முதல் தர பாதுகாப்பாக நீதிமன்றங்கள் விளங்க வேண்டும் என்றும்மனிதத் தன்மையின் வெளிப்பாடாக விளங்கும் நீதித்துறையின் ஒரு  தீர்வுதான், பிணை அளிப்பது என்பது என்றும்  மிகவும் குறிப்பாக ஒரு நாளைக்கு மறுக்கப்படும் சுதந்திரம், அத்தகைய பல நாட்களில்  மறுக்கப்படும்  சுதந்திரமாக இருப்பதும் ஆகும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

பலவற்றின் உண்மை நிலை

தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த அளவுக்கு மரியாதை அளித்து சிறப்பான தொரு மொழியில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள மிகச் சிறந்த பாராட்டுகளைப் பற்றி, இந்திய நீதித்துறை யைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் வியப்படைந்து போயிருப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. உச்சநீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது, பீமா கோரேகான் போராட்டங் களில் கலந்து கொண்டதால் சிறைப்படுத்தப்பட்ட தன்னார்வலத் தொண்டர்கள் இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறைகளில் துன்புற்று வரு கின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணை இன்னமும் கூட தொடங்கப்படவில்லை. அவர்கள் விண்ணப்பித்த பிணை மனுக்கள் யாவும் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இன்ன மும் அவர்கள் சிறைக் கூடங்களில்தான் அடைக்கப் பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற கலவரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட் மாணவர்கள் பல மாதங்களாக எந்த வித விசாரணையும் இன்றி சிறைச்சாலைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.  கலவரம் நடந்த இடத்தில் இல்லா மல் இருந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீங்கள் நெருப்பைத் தொடும்போது அது உங்களைச் சுடு கிறது என்று உங்களால் புகார் கூறமுடியாது என்று கூறியதன் மூலம் உண்மையைப் போன்று தோன்றும் பொய்யின்  அடிப்படையில் ஒரு நீதிமன்றம் அவர்க ளுக்கு பிணை அளிக்க மறுத்துவிட்டது. இன்னமும் கூட அந்த மாணவர்கள் சிறைகளில்தான் இருக் கின்றனர்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று அரசமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டபோது,  ஆயிரக்கணக்கான குடி மக்கள் அப்போதிருந்து பல மாதங்களாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். அதனை எதிர்த்து அவர்கள் அளித்த ஆள்கொணர்வு மனுக் கள் விசாரிக்கப் படாமலேயே உள்ளன அல்லது முட்டாள்தனமான காரணங்கள் கூறப்பட்டு நிராகரிக் கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தனி மனித சுதந்திரத்தைப் போற்றி துதி பாடியுள்ள அதே உச்சநீதி மன்றம்தான், ஓராண்டு காலத்துக்கு முன்பு 2019ஆம் ஆண்டில், "சிறீநகர் மிகமிகக் குளிராக இருக்கும் இடம்; அங்கு போகவேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய்" என்று சிறையில் இருக்கும் ஓர் அரசியல்வாதியின் மகள் அளித்த ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது கேட்ட நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இதே உச்சநீதிமன்றம்தான்,  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய சில குறிப்பிட்ட நபர்களை கருநாட உயர்நீதிமன்றம் சிறைகளில் இருந்து  விடு வித்தபோது, அந்த ஆணையை உச்சநீதிமன்றம் ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்தது. சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு நாள் பல நாட்கள் மறுக்கப்பட்ட சுதந்திரத்துக்கு சமம்  என்பது இதனைப் பற்றி கூறப் பட்டது போலவே இருக்கக்கூடும்.

இந்தப் பின்னணியில் தனிமனித சுதந்திரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின்  பாராட்டுரையை ஒரு கொடிய நகைச் சுவையாகத்தான் பார்க்க முடிகிறது. ஒரு வேளை, அந்த சொற்கள் கடந்த காலத்தில் தாங் கள் செய்த தவறுகளை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டு, அவற்றை மீண்டும் செய்யமாட்டோம் என்பதைக் கூறுவதாகவும்  எவரேனும் எடுத்துக் கொள்ளக் கூடும். கடந்த சில மாதங்களாக தனி மனித சுதந்திரத்தை   இழிவுபடுத்தி வந்துள்ள நீதித்துறை இப்போது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளது என்று நம்புவதற்கும் கூட எவரேனும் முன்வரக் கூடும். அது போலவே ஆள் கொணர்வு மனு மற்றும் பிணை அளிப்பது ஆகியவற்றுக்கு மறுபடியும் புதியதாக பொருள் காணத் துவங்கவும் கூடும்.

ஆனால், அர்னாப் கோஸ்வாமி வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு கடந்த இரண்டு மாத காலத்திய நிகழ்வுகளைக் காணும்போது, தனிமனித சுதந்திரம் பற்றி நீதித்துறை அளித்துள்ள பாராட்டு, அது எழுதப்பட்ட காகிதத்தின் அளவுக்குக் கூட மரி யாதையையோ மதிப்பையோ பெற்றிருக்கவில்லை என்பது மிக நன்றாக தெரிய வந்துள்ளது; மெய்ப் பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மிகமிக மோசமான

எடுத்துக் காட்டுகள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உத்திர பிரதேச மாநில ஹத்ராவில்  நடைபெற்ற மிகக் கொடூ ரமான கூட்டு பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நிகழ்வைப் பற்றி அறிவதற்காக அக்டோபர் மாதத்தில் ஹத்ராவுக்கு சென்று கொண்டிருந்தபோது,  கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் என்பவரும் அவரது சகாக்கள் மூவரும் வழியில் உத்தர பிரதேச மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கப்பனது வழக்குரை ஞர்கள் அவர் சார்பாக ஆள்கொணர்வு மனுவை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆனால், "ஒரு நாளைக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்  பல நாட்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரமாகத்தான் இருக்கும்" என்று உச்சநீதிமன்றம் கூறியதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது தெரியவந்தது.

அந்த வழக்கை பல விசாரணைகளுக்குப் பின்னும் உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துக் கொண்டே வந்துள்ளதுடன், இந்த விஷயத்தில் உயர்நீதிமன் றத்தை ஏன் அணுகவில்லை என்ற கேள்வி கேட்டு கப்பனின் வழக்குரைஞர்களைத் தொடர்ந்து துன் புறுத்திக் கொண்டே வந்துள்ளனர். கோஸ்வாமி வழக்கில் உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யும் மனுக்கள் சிறப்பான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கத் தக்கவை என்றும்,  உச்சநீதிமன்றத்தின் முன் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்வது, அரசமைப்பு சட்டப்படியானதொரு உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தேசித்திருந்த ஒரு நாளில் உச்சநீதிமன்றம் அந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. இதன் காரணம் டாடா சன்சுக் கும் சைரஸ் மிஸ்ரிக்கும் இடையேயான வழக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக அன்று விசாரிக்கப் பட்டதுதான். இந்த கட்டுரை எழுதப்படும்போது, கப்பன் இன்னமும் சிறையிலேயேதான் வாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  முனாவர் பரூகி என்ற பெயர் கொண்ட நகைச்சுவை நடிகர், அவர் இந்தூரில் ஒரு நகைச் சுவை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது,  மற்றவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பரூகி "ஹிந்து கடவுள்களை இந்த நாடகத்தில் அவ மதித்து விட்டார்"  என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது. இன்றைய இந்திய அரசின் மக்களாட்சியைப் பற்றி கூறுவதற்கு என்ன மாதிரியிலான கடவுளைப் பற்றிய நகைச்சுவையை பேச முடியும் என்பது ஒரு பக்கத்தில் இருக்க, இறுதியில் பரூக்கி எந்த ஒரு நகைச் சுவையையும் கூறவே இல்லை என்பதும் தெரிய வந்தது.

இந்த உண்மை காவல்துறையினருக்கு சுட்டிக் காட்டப்பட்டபோது, அவர்கள் "அதைப்பற்றி பரவாயில்லை. எப்படியானாலும் அவன் அந்த நகைச் சுவை செய்திகளை சொல்லவே போகிறான்" என்று கூறியது,  "சிறுபான்மை அறிக்கை" என்ற திரைப்படத் தின் வழியிலேயே இந்திய காவல்துறை உறுதியாகக்  கொண்டு வரப்பட்டு உள்ளது என்றே கூறலாம். உள்ளூர் நீதிமன்றம் பரூக்கியின் பிணை மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அதனைத் தொடர்ந்து அவரது சகாக்களின் பிணை மனுக்களும்,  விளக்க முடியாத ஒரு வழியில், அதாவது அவரை விடுதலை செய்வது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று கூறி, தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.  இவர்கள் விடு தலை செய்யப்படுவதால், சட்டம் ஒழுங்கு கெடும் என்று கூறினால், அதற்கு யார் பொறுப்பு என்பதை எண்ணி வியப்படையவே நம்மால் இயலுகிறது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதியன்று பரூகியின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உடனடியாக அவரது வழக்குரைஞர்கள் உயர்நீதி மன்றத்தை நாடினர். ஜனவரி 15 அன்று அந்த மனு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதற்குக் கூறப்பட்ட காரணம்,  தங்கள் காவல்நிலைய நாட்குறிப்பேட்டை காவல்துறையினர் கொண்டு வரவில்லை என்பதுதான். காவல் நிலையம் இரண்டு நிமிட நேரத்தில் அடையக் கூடிய தொலைவில் இருந்ததால் அதைக் கொண்டு வருவதற்கு அதிக நேரம் தேவைப்படாது என்பது குறிப்பிடப்பட்ட  போதிலும் அந்த விசாரணை அன்று எடுத்துக் கொள் ளப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பரூகி இன்னமும் சிறையில்தான் இருக்கிறார்.

இந்திய நீதித்துறையின் விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதி மன்றம் வரையில் ஒவ்வொரு நிலை யிலும்,  அர்ணாப் கோஸ்வாமி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, தனி மனித சுதந்திரம் என்ற பிரச்சினை எந்த அளவுக்கு மிகமிக மோசமாகக் கையாளப்பட்டு வரு கிறது என்பதைத் தெளிவாக இந்த இரு வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய எடுத்துக் காட்டு களை எவ்வளவு வேண்டுமானாலும் மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போக முடியும். ‘பீமா கொரகான்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூகத் தன்னார் வத் தொண்டர்களும்,  டில்லி கலவர வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களும் இன்னமும் சிறைகளில்தான் இருக்கின்றனர். உண்மை போலத் தோன்றும் பொய்யான செய்திகளின் அடிப்படையிலேயே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினாலே போது மானது.

சட்டத்தின் ஆட்சிக்கு

எதிரான தாக்குதல்கள்.

"ஒரு மனிதனை நீங்கள் காட்டுங்கள்; நான் உங்களுக்கு சட்டத்தைக் காட்டுகிறேன்" என்று குடிமக்களிடையே நீதிமன்றங்கள் கூறும்போது, ஒரு சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது முற்றிலுமாக செயலிழந்தே போகிறது. "சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு நாள், பலநாட்கள் மறுக்கப்பட்ட சுதந்திரம் போன்றதே என்று உச்சநீதிமன்றம் ஒரு நாளில் சொல்லும்போதே, சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக செயலிழந்து போகிறது. அதே நேரத்தில்,  உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஒவ்வொரு நீதிமன்றமும்,  ஆண்டுக் கணக்கில், மாதக் கணக்கில் எந்த வித விசாரணையும் இல்லாமல் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள மக்களின் பிணை மனுக்களை நிராகரித்து வருகின்றன. பரூகியின் வழக்கில், குற்றமே இழைக் காத ஒரு மனிதன் மீது பொய்யாகக் குற்றம் சாட்டி நீதிமறுக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் ஒரு சிலருக் கானது மட்டுமல்ல" என்று நீதிமன்றம் உரத்த குரலில் முழங்கும்போதே, சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக செயலிழந்து போகிறது.  ஆனால், அது தனது செயல்பாட்டில் ஒரு சிலருக்கு மட்டுமே சுதந் திரம் அளித்தும், இழப்புக் கேடாக பலருக்கு சுதந் திரம் மறுக்கப்பட்டு, வாரங்களையும், மாதங்களையும் சிறைகளில் இருந்து எண்ணிக் கொண்டே அவர் களை இருக்கச் செய்கின்றன இன்றைய நீதிமன்றங் கள். தனிமனித சுதந்திரத்தைப் பற்றி இந்த அளவுக்கு மிகமிக மோசமான, இழிவான அணுகுமுறையை  நீதித்துறை கொண்டிருக்கும்போது, சமூகத்தில் சட் டத்தின் ஆட்சி முற்றிலுமாக செயலிழந்து போகிறது என்பதை எவரும் மறுக்கவே முடியாது.

நன்றி: ‘தி இந்து‘, 20-01-2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

Comments