ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

· வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை தங்கள் போராட்டம் தொடரும். பொங்கலை ஒத்த லோக்ரி பண்டிகையையும் போராட்டக் களத்தில் கொண்டாடுவோம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

· தன்மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதை உணர்ந்த டிரம்ப், தவறுக்கு மன்னிப்பு கேட்க உத்தேசித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

· இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலையின்மை 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என இந்திய பொருளாதார ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அரசு பொருளாதார வளர்ச்சிக்கான முனைப்பில் ஈடுபட வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

· பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் கடைகளில் தமிழக அரசு வழங்கும் ரூ. 2500 மற்றும் இலவச உணவுப் பொருட்கள் குறித்து அதிமுகவினர் கடைகளின் முன்பு பேனர்கள், துண்டறிக்கை வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· திருமண வயது கொண்ட ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் அமைதியான வாழ்க்கையில் யாரும் தலையிட முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

· பிரதமர் மோடியுடன் நடத்திய கலந்துரையாடலில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், கட்டுமான செலவினங்களை அதிகரிக்கவும் பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

· அமெரிக்க அதிபர் டிரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகளை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதால், அவரது சுட்டுரைக் கணக்கை நிரந்தரமாக தடை செய்துள்ளது.

· மோடி அரசு வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, விவசாய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதே புத்திச்சாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

· விவசாயிகள் போராட்ட நாள் 44: 8ஆவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது, வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் இந்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை வரும் 15ஆம் தேதி நடத்தலாம் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. "ஒன்று வாழ்வோம், இல்லை சாவோம்" என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முன்பாக கூட்ட அரங்கில் இருந்த விவசாயிகள் பிரதிநிதி கைப்பட எழுதிய காகிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

· நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை கருத்தில் கொண்டும், மத்திய அரசின் அறிவுரையை கவனத்தில் கொண்டும் திரையரங்குகள், திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும்வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

- குடந்தை கருணா

9.1.2021


Comments