அய்ம்பெரும் முழக்கங்கள்!

கலைஞர் என்றால் யார்? அவரை ஏன் எவரும் மறக்க முடியாது? அவர் விட்டுச் சென்ற கொள்கை முழக்கங்கள் என்றைக்கும் இருக்கும் என்பதால் அவரைக் கடந்து செல்ல எவராலும் முடியாது என்று சொன்னார் தமிழர் தலைவர் அவர்கள்.

அண்ணா மறைந்த நிலையில், திருச்சியில் நடை பெற்ற முதலாண்டு நினைவு மாநாட்டில் மானமிகு கலைஞர் கொடுத்த இலட்சியப் பூர்வமான "அய்ம் பெரும் முழக்கங்களை" எடுத்துச் சொன்னது மட்டு மல்ல; அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல எடுத்துச் சொல்ல அனைவரும் தொடுத்துச் சொல்ல வேண்டும் - முழங்கிட வேண்டும் என்ற வேண்டு கோளோடு அந்த அய்ம்பெரும் முழக்கங்களை எடுத்துக் கூறினார்.

1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

2. ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்.

3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

5. மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி

இந்த முழக்கங்களை ஒவ்வொன்றாக தமிழர் தலைவர் எடுத்துச் சொன்ன போது, ஒவ்வொரு முறையும் அவற்றை உள் வாங்கி உணர்ச்சிப் பூர்வ மாக பொதுமக்கள் முழங்கிய காட்சி கண்கொள்ளாக் காட்சி, காதுகளில் என்றென்றைக்கும் எதிரொலித் துக் கொண்டே இருக்கும் இவை வெறும் முழக்கம் அல்ல - போர் ஆயுதம் என்றும் குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

இது வெறும் சிலை திறப்பு விழா அல்ல. திராவிட இயக்க சிந்தாந்த விழா, கலைஞர் எதற்காக வாழ்ந் தார் என்பதை நினைவூட்டும் கொள்கை விழா என்பதற்கு இந்த அய்ம்பெரும் முழக்கங்களே கண் கண்ட காட்சி என்றால் அது மிகையல்ல.

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் இந்தக் காட்சிகளை உணர்வுகளை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே இருந்தார். கழகத் தலைவரிடம் பேசும்போது, 'கொல்கத்தாவுக்கு ஒரு முறை வருமாறு மம்தா அவர்கள் அழைப்புக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments