ரஷ்ய நாட்டில் முழுவதும் உதவித் தொகையுடன் உயர்கல்வி பயில்வதற்கு சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் பண்பாட்டு மய்யம் அறிவிப்பு

சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் பண்பாட்டு மய்யம் (Russian Center  of  Science  and  Culture (RCSC), ரஷ்ய  நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு, பி.எச்டி., ஆராய்ச்சிப் படிப்பினை முழுவதும் உதவித் தொகையுடன் மேற்கொள்ள விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஜனவரி 20ஆம் நாள் முதல் தொடங்கி பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

education-in-russia.com  எனும் வலைத்தளத்தில் கேட்கப்படும்  விவரங்களுடன் பதிவு செய்யலாம். பதிவு  செய்திட கடைசி நாள்: பிப்ரவரி 20.

இணையவழி விண்ணப்பங்களை தெரிவு செய்வது பற்றிய நிகழ்ச்சிஜனவரி 28ஆம் நாள் மாலை 5 மணி அளவில் நடைபெறும். கூட்டத்தில் பங்கேற்பதற்கு ID: 426 917 2816. 

Passcode: rcsc28 ஆகிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் உயர்க்கல்விக்கான  உதவித் தொகை விபரங்கள் அறிந்திட மின்னஞ்சல்: ruslang.chennai@ind.rs.gov.ru  அல்லது தொலைபேசி எண்: +91 44 2499 0050 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Comments