தேசிய சித்த மருத்துவ நாள் விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு பரிசு

திருச்சி, ஜன. 6- நான்காவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு  மாறிய தலைமுறையும் மாறாத சித்த மருத்துவமும்என்ற தலைப்பில்  பேச்சுப்போட்டி 29.12.2020 அன்று காலை 11 மணியளவில்திருச்சி மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் பெரியார் மருந்தி யல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல் மாணவர் மா. சிவகணேஷ், இளநிலை மருந் தியல் மாணவி . ரம்யா மற் றும் சோதனைக்கூட ஆய்வா ளர் துறை மாணவி பழ. ஆர்த்தி ஆகியோர் பங்கேற்று டெங்கு, சிக்கன்குனியா, தற் போது  உலகையே அச்சுறுத் திக் கொண்டிருக்கும் கரோனா நோயும் மக்களை சித்த மருத் துவத்தின் பக்கம் ஈர்த்துள்ளது என்பதனையும் தொடர்ந்து அத்துறையில் பல ஆராய்ச் சிகள் செய்வதன் மூலம் தமிழ் மருத்துவத்தின் புகழை உல கறியச்செய்ய முடியும் என் றும் உரையாற்றினர்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்ட  ஒருங்கிணைந்தஅரசு தலைமை சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ், சித்த மருத்துவர்கள் மரு. வத்சலா, மரு. அன்பரசு ஆகியோர் நடுவராக பங்கு கொண்ட இப்போட்டியில் முதுநிலை மருந்தியல் மாண வர் மா. சிவகணேஷ் சிறப்பு பரிசாக பாராட்டுச்சான்றித ழும் நினைவுப்பரிசும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளார். பரிசு பெற்ற மாண வருக்கு கல்லூரியின் நிர் வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இப்போட்டியில் திருச்சி மாவட்டத்திலுள்ள கலை, அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளிலிருந்து பல மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

Comments