சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, ஜன.10- மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர் களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் முராரி ஆணையத்தின் பரிந் துரைகளை அமல்படுத்தக் கோரியும் மீனவர்கள் பாது காப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய் மைப்படுத்துவது, புயலில் சேத மடைந்த இணைப்பு சாலையை புனரமைப்பது, மீன் கடை களை ஒழுங்குபடுத்துவது உள் ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எல்.பி. மவுரியா, மீன்பிடித் தடைக் காலத்தில் வழங்கப்படும் மானி யத் தொகையை உயர்த்த கோரி இந்த வழக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்டது.

ஆனால் வழக்கின் பிரதான கோரிக்கையை விடுத்து மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது உள்ளிட்டவை களுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டது. பிரதான கோரிக்கையை கருத் தில் கொள்ளவில்லை என வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘மெரினா கடற்கரையை அழகு படுத்து வதை விட மீனவர்களின் நலனும், அவர்களுக்கான மனித உரிமைகளும் தான் முக் கியத் துவம் வாய்ந்தது. அழகுபடுத் துவது தேவை தான் என்றாலும், மீனவர் நலன் சார்ந்த விவகா ரங்களே முதன் மையானது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத் துவம் அளிக்க வேண் டும்’’ என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பொங்கல் விடு முறைக்குப்பின் தள்ளி வைத்தனர்.

Comments