‘தினமலரின்’ திசை திருப்பல்!
கொல்கத்தாவில் நடைபெற்ற நேதாஜி பிறந்த நாள் விழாவில் முதல் அமைச்சர் மம்தா பேச வந்தநிலையில், ‘ஜெய்சிறீராம்!’ என்று முழக்கமிட்ட போது, முதல் அமைச்சர் பேச்சைத் தொடராமல், பேச அழைத்தமைக்கு நன்றி தெரிவித்து நாற்காலியில் அமர்ந்தார் - இதனை இந்துக்களுக்கு எதிரான செயல் என்று கூறி மக்கள் கோபம் என்று ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னொரு கட்சியைச் சேர்ந்த முதல்வர்- அதுவும் பிரதமர் முன் பேச வந்த போது - சங்பரிவார் ‘ஜெய் சிறீராம்‘ என்று கோஷம் போடுவதெல்லாம் அநாகரிக செயல் என்று எழுதாத பார்ப்பன ‘தினமலர்’ எப்படி திசை திருப்புகிறது பார்த்தீர்களா!
இன்னும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவரோ!
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்து கூட்டணி ஆட்சி அமையும்.
- தமிழக மேலிடப் பொறுப்பாளர்
சி.டி. ரவி அறிவிப்பு
பாவம் அதிமுக - இன்னும் எப்படி எப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவார்களோ!
சாயம் வெளுக்கிறது!
கடவுளுக்கு இன சாயம் பூசக் கூடாது.: - ‘தினமலர்’
மத சாயம் பூசலாமோ! அயோத்தியில் மசூதியை இடித்து ராமன் கோயில் கட்டுவது என்ன சாயமோ?
புரோகிதம் என்றாலே சுரண்டல் தானே!
தெ.ஆப்பிரிக்காவில் கரோனாவால் மரணம் அடைந்த இந்திய வம்சாவளியினரிடம் ரூ.10 ஆயிரம் வரை பார்ப்பனப் புரோகிதர்கள் கொள்ளை.
சுரண்டலுக்கு மறுபெயர்தானே புரோகிதம் - அது நாடு தாண்டியும் நர்த்தனம் ஆடுவதில் ஆச்சரியம் இல்லை!
கடவுள்கள் தோற்றுவிக்கப்பட்டது எப்படி?
செங்கற்பட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் பெயர் கலெக்டர் பிள்ளையாராம்! அதற்குக் குடமுழுக்காம்!
கடவுள்கள் மனிதர்களால் எப்படி எப்படி எல்லாம் தோற்றுவிக்கப்பட்டன என்பது இப்பொழுது புரிகிறதா?
கோயிலில் பள்ளியறையாம்!
சென்னை காளிகாம்பாள் கோயில் பள்ளியறைக்கு வெள்ளி கதவுகள் அன்பளிப்பு. ஜனவரி 29 அன்று விழா.
கோயில்களில் பள்ளியறைகள் எல்லாம் இருக்கும், ஆனால், கழிப்பறை மட்டும் இருக்காதோ!
திணிப்போ திணிப்பு!
திண்டுக்கல் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்களாம்!
கண்மண் தெரியாமல் இந்தி திணிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமா?
அண்ணா ஆட்சி
வாக்காளர்ப் பட்டியலில் பெயரோடு - அவரவர் ஒளிப்படமும் இடம் பெறுகிறது அல்லவா? அந்த வகையில் யாரோ ஒருவரின் பெயரை அச்சிட்டு அவருக்கு எதிரில் அண்ணா உருவம் அச்சிடப்பட்டுள்ளது.
அண்ணா திமுக ஆட்சி என்று அடையாளம் காட்டுகிறார்களோ!
தொட்டிலை மட்டுமா?
2022 ஆம் ஆண்டு முதல் பெண்கள் இராணுவத்தில் விமானிகளாக சேர்க்கப்பட உள்ளனர்..
‘தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை' என்றார் புரட்சிக்கவிஞர்.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவரோ
இந்த நாட்டினில்?
மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு: - தளபதி மு.க.ஸ்டாலின்
மகிழ்ச்சிதான். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ள குளறுபடிகளை சரி செய்ய எவ்வளவுக் காலம் தேவைப்படுமோ!
சபாஷ், சரியான போட்டி!
‘நீட்' தேர்வை ஸ்டாலின் ரத்து செய்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன்: - அன்வர் ராஜா, அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்
‘நீட்' தேர்வு வந்ததால் தற்கொலை செய்துகொண்டனர் அனிதா உள்பட பல மாணவ, மாணவியர்களும். ‘நீட்' தேர்வு ஒழிக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வதாக இவர் சொல்கிறார்! யார் எந்தப் பக்கம் என்பது தெளிவாகிவிட்டது. (குறிப்பு: எந்த வகையிலும் தற்கொலையை ஆதரிக்க முடியாது).
திருவண்ணாமலைக்கு உள்ள அடையாளம்!
தளபதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திருவண்ணாமலையிலிருந்து தொடங்குகிறார்.
தந்தை பெரியார் தேதி கொடுத்து, கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது - திருவண்ணாமலையில்தான். காரணம், அவரின் மரணம். அன்னை மணியம்மையார் அந்தத் திருவண்ணாமலையிலிருந்து தான் சூளுரைப் பயணத்தைத் தொடங்கினார்.
அவாள் பேங்கா?
காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனைக்கு ஆம்பு லன்சை பாரத ஸ்டேட் வங்கி நன்கொடையாக வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இயங்கும் அரசு வங்கி - சங்கர மடத்துக்கு ரூபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கிட வில்லையா?