தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்டநீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேச்சு

சென்னை,ஜன.11, சென்னை ராயப் பேட்டை ஒய்.எம்.சி.. மைதானத்தில் திமுகவின் சட்டத்துறை இரண்டா வது மாநாடு, சட்ட மற்றும் அரசியல் கருத்தரங்கம் நேற்று (10.1.2021) நடந் தது. இதில் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தக் காலத்தில் சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து ஏற்பட் டுள்ளது. அதனால் தான் இத்தகைய கருத்தரங்கை திமுக வழக்குரைஞர் அணி ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் மன்றத்தில் மட்டும் பேசிக் கொண்டு இருக்க முடியாது, நீதி மன்றங்களையும் பயன்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடி எங்க ளுக்கு ஏற்பட்டுள்ளதைப் போல, நீதிமன்றங்களில் மட்டுமல்ல, மக்கள் மன்றங்களிலும் பேசியாக வேண்டும் என்ற நெருக்கடி உங்களைப் போன்ற வழக்குரைஞர்களுக்கும் ஏற்பட் டுள்ளது. அதன் விளைவாகத்தான் இத்தகைய கருத்தரங்கங்கள் ஏராள மாக நடத்தியாக வேண்டும்.வழக் குரைஞர்களின் பணி மகத்தானது; முக்கியமானது. வழக்குரைஞர்கள் இல்லாமல் அரசியல் இல்லை, அரசி யல் கட்சிகள் இல்லை. அதுதான் உண்மை. எல்லா இயக்கங்களையும் வளர்த்தவர்கள் வழக்குரைஞர்கள் தான். திமுகவும் வழக்குரைஞர்களால் நிறைந்த இயக்கம் தான். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரை ஞர்கள் தமிழகம் முழுவதும் திமுகவை காக்கும் வழக்குரைஞர்களாக இருக் கிறார்கள். இவை அனைத்துக்கும் மேலாக எனக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பது சட்டத்துறையால் கிடைத்தது என்பதை எனது வாழ் நாளில்; உயிர் போகிற வரை நான் மறக்க மாட்டேன். 95 வயது வரை இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் உயர் வுக்காக ஓயாமல் உழைத்த முத் தமிழறிஞர் கலைஞருக்கு, அவரது வாழ்நாள் ஆசையானஅண்ணாவுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்என்ற ஆசையானது எங்கே நிராசையாகப் போய்விடுமோ என்று நினைத்த போது சட்டத்தின் சம்மட்டியால் அதிமுக அரசின் மண்டையில் கொட்டி அந்த உரிமையை மீட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள் என்பதை நான் மறக்க மாட்டேன் என உரை யாற்றினார்.

Comments