தாராபுரத்தில் “மயக்க பிஸ்கெட்டு”கள் ஓர் எச்சரிக்கை புத்தகம் வழங்கல்

 

தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை புத்தகம் தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் நா.மாயவன், செயலாளர் .முனிஸ்வரன் ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது.

மடத்துகுளம் ஒன்றியம் காரத்தொழுவு பேருந்து நிலையத்தில் தொடங்கி, கவிஞர் கணியூர் பேருந்து நிலையம், ஆஸ்பத்திரிமேடு, சோழமாதேவி பேருந்து நிலையம், சோழமாதேவி மேடு, மடத்துக்குளம் பேருந்து நிலையம், உடுமலை, நகர பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் 20.12.2020 அன்று வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள் காங்கேயம் நகர பேருந்து நிலையத்தில் தொடங்கி, காங்கேயம் அரசு மருத்துவமனை, வெள்ளகோயில் நகர பேருந்து நிலையம், உப்புபாளையம், தாராபுரம் நகரம் மீனாட்சிபுரம், உப்புத்துறைபாளையம், அண்ணாசிலை, தாராபுரம் ஒன்றியம் - அலங்கியம் பேருந்து நிலையம், காமராசர் நகர், வீராட்சிமங்கலம் ஆகிய பகுதிகளில் 21.12.2020 அன்று வழங்கப்பட்டது.

உடனுக்குடன் காவிகளுக்கு பதிலடி கொடுப்பது திராவிடர் கழகம் மட்டும்தான் என்று புத்தகம் வாங்கிய பொதுமக்கள் பாராட்டினார்கள். புத்தகம் வழங்கிய அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பு இருந்தது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் முத்துமுருகேசன், மாவட்ட அமைப்பாளர் சி.மயில்சாமி, பொதுக்குழு உறுப் பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல், தாராபுரம் நகர அமைப் பாளர் இரா.சின்னப்பதாசு, தாராபுரம் ஒன்றிய செயலாளர் .முருகன், காரத்தொழுவு கிளைக்கழக அமைப்பாளர் .நாக ராசன், அலங்கியம் கிளைக்கழக பொறுப்பாளர் கே.என். புள்ளையான், மீனாட்சிபுரம் கிளைக்கழக பொறுப்பாளர் சித்திக், வெள்ளகோவில் நகர இளைஞரணிச் செயலாளர் இரா.திராவிடவ்செல்வன், தாராபுரம் ஒன்றிய .. தலைவர் பு.முருகேசு, உடுமலை ஒன்றிய .. தலைவர் .வெங்கடாசலம், தாராபுரம் கழக தோழர் வே.மாரியப்பன், மடத்துக்குளம் தோழர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகம் வழங் கினார்கள்.

Comments