இலெமுரியா அறக்கட்டளை - கரோனா கால மனிதநேயப் பணிகள்: சிறப்பு மலர் வெளியீட்டு விழா

மும்பை, ஜன. 8- இலெமுரியா அறக்கட்டளையின் மனிதநேயப் பணிகளின் தொகுப்பாக கரோனா கால மனிதநேயப் பணிகளின் சிறப்புமலர் 2020 வெளியீட்டு விழா 3.-1.-2021 ஞாயிறு மதியம் 2:00 மணியளவில் மும்பை மாதுங்கா, கிங்ஸ்சர்க்கிள் பகுதியிலுள்ள மைசூர் அசோகியேசன் கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் மகாராடமடிரா மாநில தொழில் மேம்பாட்டுக்கழக தலைமைச் செயல் அதிகாரி டாக் டர் பொன். அன்பழகன் அய்ஏஎஸ். அவர்களின் துணைவியார் கனி மொழி அன்பழகன் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு சிறப்பு மலர்- 2020அய் வெளியிட்டு வாழ்த் துரை வழங்கினார்.

168 பக்கங்களில் வண்ணப் பதிப் பாக வெளிவந்துள்ள இந்த மலரில் மகாராட்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மகாராட்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் சிந்தே ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், பல்வேறு பகுதிகளில் இலெமுரியா அறக்கட்டளை வழங்கிய உணவுத் தொகுப்பு ஒளிப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இலெமுரியா அறக்கட்டளை அறங்காவலர் நங்கை குமணராசன் வரவேற்புரையுடன் தொடங்கிய இவ்விழாவில் எழுத் தாளரும், பன்னாட்டு பெண்ணியக் குழுமம் ஊடறுஎன்றஅமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கவிதாயினி புதிய மாதவி தலைமை தாங்கி மலர் சிறப்புகள் குறித்து விரிவுரை யாற்றினார்.. சிறப்பு மலரின் முதல் இரண்டு பிரதிகளை சமூகச் சேவ கரும் வழக்குரைஞருமான மஞ்சுளா கதிர்வேல் மற்றும் மகிழ்ச்சி மகளிர் பேரவை ஒருங்கிணைப்பாளர் சுமதி மதியழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து மும்பை தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் நெல் லைப் பைந்தமிழ் (டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம்), இராஜாபால், சித்தார்த்தன்  (தானே தமிழ்ச் சங்கம்), இராமசாமி (வீரார்தமிழ்ச் சங்கம்), . ஜேசுராசு  (கலைஞர் தமிழ்ச் சங்கம்) இரா. காந்தி (ஒர்லி தமிழர் நற்பணி மன்றம்) . பன் னீர்ச் செல்வம் (விழித்தெழு இயக் கம்) பெ. கணேசன் (திராவிடர் கழகம்) செந்தில்வேல் (ரேரோடு தமிழ்ச் அங்கம்) முத்தமிழ் தண்ட பாணி (முத்தமிழ் மன்றம் அம்பர் நாத்) கோ. சீனிவாசன் (மலாடு தமிழ்ச் சங்கம்) தன்சிங்ரங்கன் (ஆரே காலனி) . கண்ணன் (வாசி நாக்கா) மு.கோவிந்தசாமி (அந்தேரிதமிழ்ச் சங்கம்) ஜி.எஸ். மணி (புனே) வழக்குரைஞர் மஞ் சுளா, சுமதி மதியழகன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்..ரவிச் சந்திரன் விழாவை நெறியாள்கை செய்தார்.

இறுதியாக அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் நன்றியு ரையாற்றினார்.

விழாவிற்கு வருகை தந்திருந்த 200க்கும் மேற்பட்ட பார்வையா ளர்கள் அனவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி தைரோகேர் டெக்னாலஜிஸ்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்டது.

Comments