பா.ஜ.க.வின் வீழ்ச்சிப் படலம்

1) வாரணாசி மோடி தொகுதியில் பாஜக தோல்வி. சமாஜ்வாடி கட்சி வென்றது.

2) மகாராட்டிராவில், நாக்பூர் மேலவைத் தேர்தலில் பாஜக தோல்வி. காங்கிரஸ் கைப்பற்றியது. ஆறு தொகுதிகளில், ஆளும் சிவசேனா கூட்டணி 4 இடங்களைக் கைப்பற்றியது.

3) அரியானா மாநிலத்தில் அம்பாலா பஞ்ச்குலா மற்றும் சோனிபட் நகரங்களில் நடைபெற்ற மூன்று மேயர் இடங்களில் ஒன்றை மட்டுமே ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

4) அய்தராபாத் மாநகராட்சி தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக சார்பில் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உபி முதல்வர் யோகி மற்றும் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு, மேயர் பதவியைப் பெற முடியவில்லை .

5).2019-க்குப் பிறகு நடந்த தேர்தல்களில் - தில்லி, ராஜஸ்தான், மகாராட்டிரா, சத்தீஸ்கர் - ஆகியவற்றில் பாஜக ஆட்சியை இழந்தது.

6) மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்து அங்கே தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

7) இதே போன்று, கர்நாடகாவிலும், தேவகவுடாவின் ஜனதா தள சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அங்கே பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

தேசிய முற்போக்குக் கூட்டணி (ழிஞிகி)

2019 தேர்தலில் 20 கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்தது.

கூட்டணியில் அங்கம் வகித்த சிவசேனா மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் மோசடி அரசியலை எதிர்த்து வெளியேறியது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு பெரிய கட்சியான சிரோமணி அகாலி தள அமைச்சர் கவூர் மக்களவையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர் அக்கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜகவுடன் கூட்டணி வைத்த மிகப் பெரியக் கட்சிகளான சிவசேனா, சிரோண்மணி ஆகிய கட்சிகள் வெளியேறி உள்ளன.

தற்போது, 16 கட்சிகள், அய்க்கிய ஜனதா தளம், அதிமுக தவிர்த்து ஏனைய சிறிய மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளன.

2014-இல் இருந்து இதுவரை 16 கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளன.

தற்போது 12 மாநிலங்களில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.

பீகார், தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணியுடன் அல்லது இல்லாமல் ஆட்சி நடைபெறுகிறது.

மோடி ஆட்சியின்

மக்கள் விரோத சட்டங்கள்:

1. பண மதிப்பிழப்பு 2. ஜி.எஸ்.டி. 3. வேளாண் சட்டங்கள் 4. குடியுரிமை திருத்த மசோதா 5. சுற்றுச்சூழல் திருத்த மசோதா 6. தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா 7. அண்டை நாடுகளுடனான பகையுறவு - லடாக் எல்லை பிரச்சினை. 8. வெறுப்பு அரசியல் 9. வேலைவாய்ப்பின்மை 10. பொருளாதாரச் சரிவு 11. சிபிஐ உள்ளிட்ட அரசின் அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவும் போக்கு. 12. பி.எம். கேர்ஸ் என்ற அறக்கட்டளையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை 13. ஊடகங்கள் மீது நிர்பந்தம். 14. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் போக்கு. 15. சமூக நீதியை ஒழித்துக் கட்டி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற திட்டம். 16. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நவீன குலக்கல்வி திட்டம். 17. அனைத்துத் திட்டங்களும், குஜராத் மார்வாரிகளின் கையில் ஒப்படைக்கும் போக்கு - அதானி, அம்பானி ; 18. 'அச்சே தின்' என்ற வெற்று கோஷம். 19. கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.145000 கோடி அளவில் சலுகைகள் 20. ஜி.டி.பி .- மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழ் நாட்டில் அதிமுக அரசின்

மக்கள் விரோத நடவடிக்கைகள் :

1. நீட் தேர்வு அனுமதித்தது. 2. டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெளி மாநிலத்தவரும் எழுதலாம். என்ற நிலைப்பாடு. 3. மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு 4. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு 5. உயர்ஜாதி பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு 10 சதவீத மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் இருந்தது. 6. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு 7. மாநில உரிமையை விட்டுக் கொடுப்பது. 8. மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்கத் தவறியது.

Comments