கலைஞர் தமிழ்ச்சங்க ஆண்டு விழா

காரைக்குடி, ஜன. 9- காரைக்குடி கலை ஞர் தமிழ்ச்சங்க 24 ஆம் ஆண்டு விழா எம்..எம். அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனரும் மேனாள் அமைச்சருமான மு.தென்ன வன் வரவேற்புரை நிகழ்த்திட மாவட்ட தி.மு.கழக செயலாளர் சட்டமன்ற உறுப் பினர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார்.

தி.மு.கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் அய்.லியோனி "நெஞ்சில் ஓர் ஆலயம்" என்ற தலைப்பிலும்,

தி.மு..கொள்கை பரப்பு இணை செயலாளர் புதுகை விஜயா "நெஞ்சில் நின்றவை" என்ற தலைப்பிலும், பேரா.சுந் தரவள்ளி "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற தலைப்பிலும் எழுத்தாளர் நெல்லை சூர்யா சேவியர் "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற தலைப்பிலும் கருத்தரங்கில் பங் கேற்று உரையாற்றினர்.

தி..தலைமை கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா தொகுத்து வழங்கினார்.

விழாவில் தி.மு.கழக மூத்த முன் னோடிகள் புதுவயலை சேர்ந்த அய்ஸ் வியாபாரி முரசொலி காஜா முகைதீன், காரைக்குடி செக்காலை பகுதியை சேர்ந்த முடி திருத்துநர்  சேது ஆகி யோர்க்கு ரூ பத்தாயிரம் மற்றும் புத் தாடை, பதக்கம் உள்ளடங்கிய பொற் கிழி  வழங்கி சிறப்பு செய்யப்பட்டனர்.

அடுத்த ஆண்டு கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.. ஸ்டாலின் அவர்களை அழைத்து வெகு சிறப்பாக மூன்று நாட்கள் மாநாடாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. முடிவில் நகர தி.மு.. செய லாளர் நா.குணசேகரன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை நகர துணை செயலாளர் சொ.கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்ளிட்ட தோழர்கள் செய்திருந்தனர்.

Comments