மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
புதுடில்லி. ஜன.27 டில்லி வன் முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
மத்திய
அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் டில்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட் டங்களை நடத்தி வந்தனர். குடியரசு தினமான இன்று அவர்கள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் பேரணியானது டில்லிக்குள் நுழைந்த பின்னர் வன்முறையாக மாற, விவசாயி ஒருவர் பலியானார்.
இந்நிலையில்
விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டில்லி வன் முறைக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல மைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
இது
குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: மத்திய அரசின் பொறுப்பற்ற நட வடிக்கையும், விவசாயிகளிடம்
காட் டிய பாரபட்சமான அணுகுமுறையும் டில்லி வன்முறைக்கு காரணம். எனவே, விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த மத்திய அரசு உடனடியாக 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.