நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் உரை

தி.மு.., காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகள் புறக்கணிப்பு

 புதுடில்லி, ஜன. 29- பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடக்கிறது. 2021--22ஆம் ஆண்டுக்கான பட் ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு இரண்டாம் அமர்வு மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் உரையை 18 கட்சிகள்

புறக்கணித்தன.

காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, தேசிய வாத காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதிமுக, கேரள காங்கிரஸ் (எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாக அறிவித் துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் சார்பில் கூட்டறிக்கையும், ஆம் ஆத்மி, சிரோ மணி அகாலிதளம் தனித்தனியாகவும் தங்கள் முடிவை தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக் கையில் கூறியிருப்பதாவது:

புதிய வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத் தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டன. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக விவசாயிகள் டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 26ஆம் தேதி நடந்த பேரணியில் மத்திய அரசின் சதியால் வன்முறை ஏற்பட்டது. விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தற்போது விவசாயிகள் குறித்து எதிர்மறையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

விவசாயிகளின் விருப்பப்படி புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண் டும் என்று எதிர்க்கட்சிகள் ஒரு மித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. ஜனநாயக முறையில் போராடி வருகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் ஆணவப் போக்குடன் செயல்படுகின்றனர். எனவே, மத் திய அரசின் போக்கைக் கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments