பெரியாரின் தோள்மீதுதான் எல்லோரும் ஏறி நிற்கிறார்கள்;
அவர்
எல்லோரையும் ஏற்றுக் கொள்வார்!
திராவிடர் திருநாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை,
ஜன.29 திராவிடர்களுக்கு ஒரே ஒருவர்தான் தோள் கொடுத்தார், அவர்தான் தந்தை பெரியார் என்ற மாமனிதர். எல்லோரும் தந்தை பெரியாரின் தோள்மீதுதான் ஏறி நிற்கிறார்கள். பெரியாரின் தோள் இருக்கிறதே, மிக அகலமான தோள். தமிழனுக்குத் தடித்த தோல்; பெரியாருக்கு விரிந்த தோள். அவர் எல்லோரையும் ஏற்றுக் கொள்வார். என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை
பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. பல்துறை
சாதனையாளர்களுக்கு பெரியார் விருது வழங்கி விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது
உரை வருமாறு:
தமிழர்
பண்பாட்டு கலை விழா
மிகுந்த
எழுச்சியோடும், மன நிறைவோடும், நம்
அனைவருடைய மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய தமிழர்
பண்பாட்டு கலை விழா என்று சொல்லக்கூடிய இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் தலைவர் மானமிகு அய்யா த.க. நடராசன்
அவர்களே,
இந்நிகழ்வில்
நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய மேனாள் நீதிபதி மானமிகு இரா.பரஞ்ஜோதி அவர்களே, தொடக்கவுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கின்ற கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, நண்பர்கள் பன்னீர்செல்வம் அவர்களே, மஞ்சை வசந்தன் அவர்களே, இரா. தமிழ்ச்செல்வன் அவர்களே,
மயிலை கிருட்டிணன் அவர்களே, தோழர் ஒளிவண்ணன் அவர்களே, பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய மானமிகு இறைவி அவர்களே.
கடந்த
ஆண்டு பல்வேறு சங்கடங்கள் நிறைந்ததாக இருந்தாலும்கூட, துன்பத்திற்கு இடையில் கொஞ்சம் இன்பம் என்று சொல்லக்கூடிய வகையில், மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய நம்முடைய இயக்கத் தோழர்கள், நேரிடையான இயக்கத் தோழர்கள் அல்ல. இயக்கத்
தோழர் என்று சொல்கிறாரே, கருப்புச் சட்டை அணிந்திருப் பதால் அப்படிச் சொல்கிறாரோ என்று நினைக்கவேண்டாம். இயக்கம் என்று சொல்லும்பொழுது திராவிடர் கழகம் மட்டும் இயக்கமல்ல; பெரியாரை எங்கெல்லாம் யாரெல் லாம் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதற்கு அடையாளம் இந்த இரண்டு பெரும் போர்வாள்கள்.
கருத்து
அறிவாயுதங்கள் - இவர்கள் இருவரும் கலைத்துறையில் பூத்த நறுமலர்கள்; காய்த்து கனிந்த கனிகள். இவர்களை அழைத்து நாம் பாராட்டுகிறோம் என்று சொன்னால், எங்கள் குடும்பத்தில் அறிவுக்குப் பஞ்சமில்லை, ஆற்றலுக்குப் பஞ்சமில்லை, திறமைக்குப் பஞ்சமில்லை, துணிவுக்குப் பஞ்சமில்லை என்பதற்கு அடை யாளங்கள் இவர்கள்.
இந்த
நிகழ்ச்சிக்கு இன்னும் சிறப்பு என்னவென்றால், இங்கே வந்து நான் அமர்ந்தவுடன், எதிர் வரிசையில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன். அங்கே அய்யா ஜெயரஞ்சன் அவர்கள் அமர்ந்துள்ளார்.
உங்களையெல்லாம்
பார்க்கின்றபொழுது எனக்கு இதை விட பெரிய டானிக் வேறு எதுவும் கிடையாது
தமிழ்நாட்டில்
இன்றைக்குப் பொருளாதாரத்தைப்பற்றி விலாவாரியாகவும், துணிச்சலாகவும் கருத்தைச் சொல்லக் கூடிய ஒரு தெளிவடைந்த பொருளாதார நிபுணர் ஒருவர் இருக்கிறார் என்றால், நாம்
பெருமைப்படக்கூடியவர்
அய்யா ஜெயரஞ்சன் அவர்கள். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நேரிடையாகக் என்னை கலந்துகொள்ளவேண்டாம் என்று சொன்னார்கள்; அதை மீறித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். உங்களையெல்லாம் பார்க்கின்றபொழுது எனக்கு இதை விட பெரிய டானிக் வேறு எதுவும் கிடை யாது; இதைவிட நல்ல மருந்து வேறு எதுவும் கிடையாது.
அய்யா
ஜெயரஞ்சன் அவர்களுக்குப் பக்கத்தில் அஜயன் பாலா அமர்ந்திருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லவேண்டுமானால், இந்த கரோனா காலத்தில், எல்லோரும் வீட்டில் முடங்கிக் கொண்டிருக் கின்ற இந்த காலகட்டத்தில், ஒரு அற்புதமான பணியை செய்திருக்கிறார்.
என்னுடைய
மகள் சிகாகோவிலிருந்து தொலைபேசி யில் பேசினார். அவர் என்னிடம், ‘‘அப்பா, அய்யா தந்தை பெரியாரைப்பற்றி அஜயன் பாலா சோசியல் மீடியாவில் பேசியிருக்கிறார்;
அது தொடர்ச்சியாக வருகிறது. அதை உங்களுக்கு அனுப்புகிறேன், அதைப் பாருங்கள்'' என்றார்.
இங்கே
இருக்கிறவர்தான் பேசுகிறார்; பொதுவாக நான் தொலைக்காட்சி பார்ப்பதில் நேரத்தை செலவழிப்பதில்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என்கிற பணிகள்தான் அதிகமாக இருக்கும். யாராவது இந்நிகழ்ச்சியைப் பாருங் கள், அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள் என்று சொன்னால் மட்டுமே பார்ப்பேன்.
அஜயன்
பாலா அவர்கள், அய்யா தந்தை பெரியாரைப்பற்றி ஒரு பெரிய தொடரில் மிக அழகாக அவர் சொல்லிய முறை இருக்கிறதே அதனை
ஒவ்வொரு குடும்பத்தினரும் கேட்கவேண்டும்.
ஒரே
ஒருவர்தான் தோள் கொடுத்தார், அவர்தான் தந்தை பெரியார் என்ற மாமனிதர்!
அஜயன்பாலா
அவர்களைப்பற்றி ஒரு அருமையான கருத்தை சொல்லவேண்டும். எதற்காக இதனை சொல்லுகி றேன் என்றால், நமக்கு அறிவு, ஆற்றல், திறமைக்குப் பஞ்சமே கிடையாது. புதிய தலைமுறையினர் ஏராளமா னோர் வருகிறார்கள். அவர்களுக்கு கட்சி முத்திரையோ, வேறு முத்திரையோ கிடையாது. அஜயன்பாலா அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்; அவர் யாருடைய தோளின்மீதும் ஏறவில்லை; ஒரே ஒருவர்தான் தோள் கொடுத்தார், அவர்தான் தந்தை பெரியார் என்ற மாமனிதர். எல்லோரும் தந்தை பெரியாரின் தோள்மீதுதான் ஏறி நிற்கிறார்கள். பெரியாரின் தோள் இருக்கிறதே, மிக அகலமான தோள்.
தமிழனுக்குத்
தடித்த தோல்; பெரியாருக்கு விரிந்த தோள். அவர் எல்லோரையும் ஏற்றுக் கொள்வார். அவர் நாமம் போட்டவரா? விபூதி பூசுகின்றவரா? என்றெல்லாம் பார்க்கமாட்டார்; நம்மவரா என்றுதான் பார்ப்பார்; அந்த
உணர்வு படைத்தவரா என்றுதான் பார்ப்பார்.
உடனே,
உயர்த்து, உயர்த்து, மேலே உயர்த்து; எதிரியைப் பார், அவன் எப்படி பேசுகிறான் என்பதைப் பார்; ஒரு பொடிப் பயலை உட்கார வைத்துக்கொண்டு, பெரியவாள் என்கிறான்; புதிய பெரிவாள் என்கிறான். அவாள் என்கிறான். பெரியவா, பெரியவா, பெரியவா என்று சொல்கிறான்.
அஜயன்பாலா
நம்மாள்
உள்ளபடியே பெரிய ஆள் என்றாலும், அவர்தானே - இவர்தானே - நேற்று அங்கே இருந்தவர் தானே என்று பேசுகின்ற மனப்பான்மையை மாற்றிக் காட்டக்கூடிய தத்துவத்திற்குப் பெயர்தான் பெரியார். அதுதான் திராவிடம்.
அஜயன்பாலா
அவர்களைப்பற்றி சொல்லவேண்டும். இந்த அரங்கம் அறிவார்ந்த அரங்கமாகும்.
கலைஞர்
அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, மாலை 6 மணியளவில் அவருடைய இல்லத்திற்கு அவர் வரச் சொல்லி, சென்றிருந்தோம்.
எண்பேராயம்
போன்று ஒரு குழு கூடும். என்னைப்
பார்த்ததும், ‘‘ஆசிரியர் வாங்க!'' என்று சொல்வார். அமைச்சர்களும் அங்கே இருப்பார்கள்.
முத்தமிழ்
அறிஞர் கலைஞர்
ஒருநாள்
அந்தக் குழு கூடும்போது, ‘‘ஆசிரியர் இன்னும் வரவில்லையா?'' என்று கலைஞர் அவர்கள் அங்கே இருந்தவர்களிடம் கேட்டார்.
"தொலைபேசியில்
சொல்லியிருக்கிறோம், ஆசிரியர் அவர்கள் வந்துவிடுவார்" என்று அவரிடம் சொன்னார் சண்முகநாதன் அவர்கள்.
ஏதோ
அவசரம் போலிருக்கிறது என்று, நான் அங்கே சென்றேன்.
என்னைப்
பார்த்ததும், ‘‘வாங்க ஆசிரியர், உங்களிடம் ஒரு செய்தியை அவசரமாக சொல்லவேண்டும்'' என்றார்.
"இந்த
வாரம் ‘ஆனந்தவிகடன்' படித்தீர்களா?" என்று கேட்டார்.
"இல்லை"
என்றேன்.
"அந்த
புத்தகத்தில், பெரியாரைப்பற்றி ஒருவர் கட்டுரை எழுதுகிறார். நீங்கள் கூட அப்படி எழுதமாட்டீர்கள். அவ் வளவு சிறப்பாக இருக்கிறது; அதனை
நீங்கள் படியுங்கள், அந்த புத்தகம் இங்கே இருக்கிறது" என்றார்.
அஜயன்பாலா
அந்தக் கட்டுரையின் தொடரை ஆரம் பித்திருந்தார்.
கலைஞர்
அவர்கள் அதனைப் படித்து சுவைத்து சொன்னார்.
அதற்குப்
பிறகுதான் நான் அஜயன்பாலா அவர்களு டைய திருமணம் மற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் சென்றேன்.
ஊடக
செய்தியாளர் செந்தில்
அதேபோன்று,
இங்கே அமர்ந்திருக்கும் நம்முடைய செந்தில் அவர்கள். ஊடக செய்தியாளர் அவர்.
ஊடகத்
துறையில், என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டேன்; எனக்கு இந்த மடம் இல்லை என்றால், சந்தை மடம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்குத் துணிச்சலோடு இருக்கக்கூடியவர்தான் செந்தமிழன் செந்தில்.
அதேபோன்று,
எங்களுடைய ஒளிவண்ணன். இதே போன்று இந்த அரங்கத்தில்
அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு வரைப்பற்றியும் சொல்லலாம்.
சாக்கடையை
விட மோசமானது
கங்கை நீர்
பெரியார்
விருது பெற்ற இந்த இருவரும் பேசிய கருத்துகளைக் கேட்டிருப்பீர்கள்.
பெரியாரை
ஒழிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பைத்தியக்காரர்கள். பெரியாரை ஒழிக்கலாம் என்று முயற்சி செய்து, இப்போது சாக்கடையை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
நாங்கள்
சந்தனத்தில் இருக்கிறோம்; நீங்கள் சாக் கடையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். கங்கை நீருக்காக காத்திருக்க முடியாது - ஆகவே, சாக்கடை நீரை தெளித்தாவது சரி செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள்.
சாக்கடையை
விட மோசமானது
கங்கை நீர் - இதனை நான் சொல்லவில்லை - இதற்காக 2,000 கோடி ரூபாயை வீணாக்கினீர்களே என்று உச்சநீதிமன்றம் கேட்டது.
இன்றைக்குக்
கங்கை நீரை குடித்துவிட்டு, நிறைய பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறார்கள்.
கங்கா
புராஜெக்ட் என்றால் என்ன அர்த்தம்?
‘திராவிடப்
பொழில்' காலாண்டு இதழ் வெளியீட்டு விழா
‘புனித'
கங்கையாம்! புனிதமாக இருந்திருந்தால், எவ் வளவு தூய்மையாக இருக்கவேண்டும். ஆனால், இந்த சாக்கடைகளும், ‘புனித'ங்கணளும் சேர்ந்து திராவிடத்தை ஒழிப்போம், திராவிடம் குறுகிவிட்டது என்று சொல்கிறார் களே, இதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு கிடையாது என்பதற்கு அடையாளம்தான் ‘திராவிடப் பொழில்' காலாண்டு இதழ்
வெளியீட்டு விழா. நான் இந்த விழா விற்குக் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணமே, திராவிடப் பொழில் வெளியீட்டு விழாவினால்தான்.
உலக
அளவில் திராவிடக் கருத்தை பரப்ப இன்றைக்கு எல்லா நாடுகளிலிருந்தும் வெளியீட்டு விழாவில் பேசினார்கள்.
திராவிடம்
என்பது என்ன?
திராவிடம்
என்பது சமத்துவம்
திராவிடம்
என்பது பகுத்தறிவு
திராவிடம்
என்பது சுயமரியாதை
திராவிடம்
என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான்.
ஆகவே,
அப்படிப்பட்ட அந்தக் கருத்தை, மிகத் தெளிவாக உள் வாங்கி - அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து என்ற அளவில் அது மிகத் தெளிவான வாய்ப்பாக அமைந்தது.
பெரியார்
விருது பெற்றிருக்கும் இந்த இரண்டு பேருடைய உழைப்பு என்பது சாதாரணமானதல்ல.
போஸ்
வெங்கட்
திரைப்படங்களை
நானோ, கவிஞரோ பார்ப்பது கிடையாது. கொள்கை ரீதியான திரைப்படம் வெளி வந்திருக்கிறது - அதனை நீங்கள் பார்க்கவேண்டும் என்று அழைத்தபோது, செல்வோம்.
அப்படித்தான் இவருடைய திரைப்படத்திற்குச் சென்றோம்.
முக்கியமானவர்களைப்பற்றி
சொல்லும்பொழுது சில குறிப்புகளைச் சொல்வார்கள். மெட்டி ஒலி என்ற தொடர் தொலைக்காட்சியில் வருகிறதே, அந்தத் தொடரில் நடித்தவர்தான் போஸ் வெங்கட் என்பார்கள். அந்தத் தொடர் நீண்ட காலத்திற்கு முன்பு தயாரித்தது. இப்பொழுது மீண்டும் மீண்டும் அந்தத் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
இப்பொழுது
வெளிவரும் திரைப்படம் மூன்று நாள்கள் ஓடினால், மூன்றாவது நாள் வெற்றிகரமான நாள் என்று போஸ்டர் அச்சடித்து ஒட்டுகிறார்கள்.
அந்த
அளவில் இருக்கும்பொழுது, எங்கள் தோழர்க ளுக்கு, எங்கள் இனத்தவருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்பதற்கு அடையாளம் அவர்.
அந்தத்
திரைப்படத்திற்கு நான் சென்றிருந்தேன். ஆணவக் கொலை எந்த அளவிற்கு இருக்கிறது என்ப தற்கு, ஒரு கொள்கையை முன்னிலைப்படுத்தி, அந்தத் திரைப்படத்தை எடுத்திருந்தார்கள்.
கரு.பழனியப்பன்
அதுபோலவே,
கரு.பழனியப்பன் அவர்கள். அந்தக் கரு என்பதை எப்படி வேண்டுமானால், விரித்துக் கொள்ளலாம். கருத்த பழனியப்பன் என்றும் இருக்கலாம்.
கருப்புக்கு
இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற மரியாதை இருக்கிறது பாருங்கள் - கருப்புதான் அமெரிக்காவையே ஆட்டி வைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
அந்த
அளவிற்கு ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் கருப்புச் சட்டை அணிந்திருக் கிறார்களே என்று நீங்கள் நினைக்கவேண்டாம். எல்லா கட்சிக்காரர்களும் இன்றைக்குக் கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்கிறார்கள்.
எந்தக்
கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தினாலும், கருப்புச் சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள். கருப் புச் சட்டை இன்றைக்குப் பொதுவுடைமை ஆகிவிட்டது - தனியுடைமை அல்ல.
தமிழர்களே,
பொங்கல் திருநாள் என்று சொல்லுகின்ற நேரத்தில், தந்தை
பெரியார் இல்லை என்றால், நாம் இந்த விழாவைக் கொண்டாட வாய்ப்புக் கிடைத்திருக்குமா? திராவிட இயக்கம் இல்லை என்றால், இந்த வாய்ப்புக் கிடைத்திருக்குமா?
அதேபோன்று,
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தை முதல்நாள்தான் தமிழ்ப்
புத்தாண்டு என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்காக ஒரு கல்வெட்டினை தந்தை பெரியார் நினைவிடத்தில் அமைத்தோம்.
ஆட்சி
மாறியவுடன், ஆரியம் ஆட்சிக்கு வந்தவுடன், அதனை தலைகீழாக மாற்றிவிட்டோம் என்றார்கள். ஆனால், நன்றாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே, இன்னும் அய்ந்தே மாதங்களில், ஆட்சி மாற்றம் வரப் போகிறது. அப்பொழுது, மீண்டும் தை முதல் நாள்தான்,
தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் இட்ட ஆணை செயல்படுத்தப்படும்.
அண்ணாவிடம்
கேட்ட கேள்வியும் -
அவரது
பதிலும்!
அண்ணா
அவர்களைப் பார்த்து,
"பத்தாண்டுகளில்
நீங்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள்.
மற்ற
தலைவர்களாக இருந்திருந்தால், ‘‘என்னுடைய சாமர்த்தியம்'' என்று சொல்லியிருப்பார்கள்.
ஆனால்,
அண்ணா அவர்கள் அடக்கத்தின் சிகரம். பெரியாரிடத்திலிருந்து அவர் கற்றுக் கொண்ட கருத்து அதுதான்.
அவர்
சொன்னார், ‘‘நீங்கள் தவறாக சொல்கிறீர்கள். நான் பத்து ஆண்டுகளில் இந்த வெற்றியைப் பெறவில்லை. எங்களுடைய தாத்தா நீதிக்கட்சி'' என்றார்.
‘‘நீதிக்கட்சியை,
150 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று சத்தியமூர்த்திகள் சொன்னார்கள். இல்லை, மீண்டும் நாங்கள் உயிர்த்தெழுந்து இருக்கிறோம்; அதனுடைய தொடர்ச்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்; நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
ஆகவே,
இந்த இயக்கத்தை அழித்துவிடலாம்; ஒழித்துவிடலாம் என்று சொல்லி, நவீன புரோக்கர்கள் யாராவது முயற்சி எடுத்தால், உங்களுக்கு புரோக்கரேஜ் கிடைக்குமே தவிர, வெற்றி கிடைக்காது.
கடந்த
நாடாளுமன்றத் தேர்தல்
முடிவுகள் தமிழ்நாட்டில் எப்படி இருந்தன?
(தொடரும்)