வடக்குத்து இந்திரா நகரில் திராவிடர் திருநாள் உரையரங்கம்

வடகுத்து, ஜன. 13- வடக்குத்து இந்திரா நகர் கழகச் சார்பில் திராவிடர் திருநாள் உரைய ரங்கம் 11.1.2021 திங்கள் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பெரியார் படிப்பகத்தில் நூலகர் கண்ணன் தலைமை யில் நடந்தது. கிளைக்கழக தலைவர் .பாஸ்கர் வரவேற் புரை ஆற்றினார்.

கழகப் பொதுச் செயலா ளர் துரை.சந்திரசேகரன் திராவிடர் திருநாள் எனும்  தலைப்பில்  சிறப்புரை  ஆற்றி னார்.  மண்டல செயலாளர் தாமோதரன் வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன்  மாவட்டஅமைப்பாளர் சி.மணிவேல் உரையாற்றினர்.

இரா.மாணிக்கவேல்  வாசுகி பாடல்கள் பாடினர். மகளிரணி பொறுப்பாளர்கள் சத்யா  குணசுந்தரி,  பத்மா தமிழ்மணி, கலைச்செல்வி, விசயாவெண்மணி,  மதிவதனி,  டிஜிட்டல் ராமனாதன்,  வேலு கனகராசு,  முருகன் ஆகியோர் பங்கேற்றனர். ரேவந்த் ஆண் டனி நன்றி கூறினார்.

Comments