தாலியும் மஞ்சளும்
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை
இனங்காண முடியவில்லை. ஆனால் தாலி, தாலாட்டு
ஆகிய சொற் களைக் கொண்டு
தால் என்பது தொங்கவிடப்படும் அணி
(காதணி, மூக்கணி, விரலணி போல) என்று
கொள்ளலாம்.
நமக்குக்
கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளி லிருந்து (சங்க (இலக்கியம், சிலப்பதிகாரம்)
அக்காலத்தில் தாலிகட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்று கிறது.
தமிழர்
திருமணத்தில் தாலி உண்டா இல்லையா
என்று தழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய
விவா தமே நடந்தது. இதைத்
தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி
தமிழர்களின் தொல் அடையாளந் தான்
என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை
தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது
என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர்
மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில்
மங்கலத் தாலி வழக்கு இல்லை
என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
இந்தியச்
சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்
முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும்
எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி
இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலிகட்டும் அதிர்ச்சி
மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன.
பின்னர் 1968இல் அண்ணா காலத்தில்
நிறைவேற்றப் பட்ட சுயமரியாதைத் திருமணச்
சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச்
சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
கடைசியாக
ஒரு செய்தி - சங்க இலக்கியங்களில் தாலி
மட்டுமல்ல; பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள்,
குங்குமம் ஆகியவையும்கூடப் பேசப் படவே இல்லை.
மஞ்சள்
பூசிக் குளிப்பதும் மஞ்சள் கயிறு அணிவதும்
பெண்ணுக்குரிய முக்கியமான விஷயங்களாக ஆகி யுள்ளன. மஞ்சள்
என்பது பெண்ணோடும் மங்களகரம்‘ என்பதோடும் இணைத்துப் பேசப்படுகிறது. ஆனால் ஆரோக்கியம் தொடர்பான
ஒரு பொருளாகவே தமிழர் வாழ்வில் மஞ்சள்
முன்பு இருந்துள்ளது. கிருமி எதிர்ப்பு சக்தி
மஞ்சளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘நோக்கி யசோதை நுணுக்கிய
மஞ்சளால்’ ‘கண்ணனை நீராட்டுவது பற்றிப்
பெரியாழ்வார் பாசுரம் பேசுகிறது. எனவே குழந் தைக்குத்
தேய்த்துக் குளிப்பாட்டும் பொருளாக மஞ்சளைத் தமிழர்கள் பயன்படுத்தியது தெரியவருகிறது.