திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு கருத்தரங்கம்

நாகர்கோவில், ஜன. 30- கன்னி யாகுமரி மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் திரா விடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி யில் உள்ள பெரியார் மய்யத் தில் நடைபெற்றது.

மாநகர திக துணைத் தலைவர் கவிஞர் . செய்க் முகமது  கடவுள் மறுப்பு கூறி னார்.  பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவ தாணு தலைமை தாங்கி சிறப் புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந் தன்  தொடக்கவுரையாற்றி னார்.  மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ் முன்னிலை வகித்தார்.   கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் எஸ். கே.கங்கா, திமுக பொறுப்பா ளர்  செல்வின்சதீஷ் குமார் ஆகியோர் கருத்துரை ஆற்றி னர், ஒன்றிய செயலாளர் செல் லையா கழகத்தோழர்கள் .நெடுஞ்செழியன், ஆதிமுரு கன், பன்னீர்செல்வம், தர்ம ராஜ், ஜெய்சிங் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அலெக்ஸாண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments