கருநாடக பா.ஜ.க. அரசின் பார்ப்பனத்தனம்!

கருநாடக மாநில பார்ப்பன மேம்பாட்டு வாரியம், மாநிலத்தில் பார்ப்பனப் பெண்களுக்காக இரு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது, அவ்வகையில்அருந்ததி' திட்டத்திற்கு மணமகளின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000 வழங்கப்படும். 'மைத்திரேயி' எனப்படும் மற்றொரு திட்டத்தில் பார்ப்பன மணமகள் ஒரு பார்ப்பன அர்ச்சகரை மணந்தால் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அருந்ததிதிட்டத்தின் மூலம் 550 பார்ப்பனக் குடும்பங்களும், ‘மைத்ரேயி' திட்டத்தின் மூலம் பல பார்ப்பனப் குடும்பங்களும் பயனடைவர்கள்.

இதைப் பற்றி பேசிய பார்ப்பன மேம்பாட்டு வாரியத் தின் இயக்குநரான சச்சிதானந்தா தெரிவித்துள்ளதாவது: ‘இத்திட்டத்தால் பயனடைபவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் பார்ப்பனராக இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும், மேலும் இத்திட்டத்தில் பயனடையும் மணமகளுக்கும் மணமகனுக்கும் இது முதலாவது திருமணமாக இருக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.

இதைப் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இளைஞர் பிரிவின் தேசிய பிரச்சார தலைவர் ஒய்.பி. சிறீவத்சா, திருமணம் என்பது தனிப்பட்ட இருவரின் தேர்வாகும், இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பிற்போக்குத்தனமான முடிவு மட்டுமல்லாமல் பெண்களுக்கு விரோதமானதாகும்.

பார்ப்பனப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்றால் பார்ப்பன மேம்பாட்டு வாரியம் பார்ப்பன பெண்கள் தொழில்முனைவோருக்கு கடன் கொடுக்கலாம், ஏழை பார்ப்பனப் பெண்களின் கல்விக்கு நிதியளிக்கலாம், அதையெல்லாம் விடுத்து இவ்வாறான ஒரு புதிய திட்டத்தை பார்ப்பன மேம்பாட்டு வாரியம் கொண்டு வந்துள்ளது கேலிக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பார்ப்பன வாரியத்தின் இயக்குநர் சச்சிதானந்தா கூறியதாவது: அர்ச்சகர்கள் பொருளாதாரத் தில் மிகவும் பின்தங்கியுள்ளனர், அவர்களுடைய பணி கள் நிச்சயமற்றதாக உள்ளது, ஆகையால்தான்மைத்ரேயி' திட்டத்தில் 3 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அந்த பணத்தை பயன் படுத்தி அர்ச்சக குடும்பத்தினர் ஒரு சிறு தொழில் துவங் கலாம் என்று சச்சிதானந்தா தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி என்றால் பார்ப்பன ஜனதா கட்சி என்று சொன்னால் ஏற்காதவர்கள்கூட கருநாடக மாநிலத் தில் ஆளும் கட்சியாக பா... இருப்பதால் பார்ப்பனர்க ளுக்காக அரசின் பணத்தை வாரி இறைப்பதைப் பார்த்த பிறகு கண்டிப்பாக இதனை ஒப்புக் கொள்வார்கள்.

ஏழைகள் வறுமைக்கோட்டுக்கும் கீழே இருப்பவர்கள் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். உண்மையைச் சொல்லப் போனால் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கப் போனால் ஜாதிக்கும் பொருளாதாரத்துக்கும்கூட முக்கிய தொடர்பு உண்டு.

இந்தியாவில் பணக்காரர்கள்

பார்ப்பனர்கள்  - 49.9%

பிற்படுத்தப்பட்டோர்   -  9.5%

பட்டியலினத்தோர்   - 9.5%

இந்தியாவில் ஏழைகள்

பார்ப்பனர்கள்  -  4.6%

பிற்படுத்தப்பட்டோர்  -  18.9%

பட்டியலினத்தோர்  -  28%

(‘எக்னாமிக் டைம்ஸ்', 12.5.2019)

உண்மைகள் இவ்வாறு இருக்க பார்ப்பனர்களில் ஏழைகள் என்று சொல்லி அரசு பணத்தை வாரி வழங்கு வது எந்த வகையில் சரி.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களிடம் தான் ஏழைகள் அதிகம் என்ற நிலையில் இவர்களுக்குத் தானே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கருநாடக மாநில பா... அரசின் இந்தப் பார்ப்பனத் தனம் நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்பதில் அய்யமில்லை. அதே நேரத்தில் பா... என்றாலேபார்ப்பன ஜனதா' என்பதை வெகு மக்கள் உணரட்டும்!

Comments