அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மறைந்த டாக்டர் சாந்தா அவர்களுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை

சென்னையில் இன்று (19.1.2021) அதிகாலையில்  மறைந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், உலகளவில் தலைசிறந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணருமான டாக்டர் சாந்தா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை - அடையாறு காந்தி நகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த டாக்டர் சாந்தா அவர்களின் உடலுக்கு பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன் மாலை வைத்து கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தினர்.  உடலுக்கு அருகில் அமர்ந்திருந்த டாக்டர் சாந்தா அவர்களின் சகோதரியார் சுசிலா அம்மையார் அவர்களிடம் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் தலைவர் தமிழர் தலைவர் விடுத்த இரங்கல் செய்தியைக் கூறி அறிக்கையை அளித்தார். அங்கிருந்தோருக்கு இரங்கல் அறிக்கை வழங்கப் பட்டது.

கழகத் தோழர்கள் சோ. சுரேஷ், . கலைமணி,

ஜெ. ஆனந்த், . ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments