திருச்சி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி, ஜன. 12- தந்தை பெரியார் 47 ஆவது நினைவு நாள் கலந்துரையாடல் கூட் டம் 13.12.2020 காலை 11.00. மணிக்கு திருவரங்கம் பெரியார் படிப்பகத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ் தலைமையில் நடை பெற்றது

கலந்துகொண்டோர்: சா. கண்ணன் திருவரங்கம் நகர தலைவர், இரா. முருகன் திருவரங்கம் நகர செயலாளர், பி. தேவா திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர், .ஜெயராஜ் விடுதலை வாச கர் வட்ட தலைவர். மு. மாதவி திருவரங்கம், .திருநாவுக்கரசு திருவரங்கம், . இங்கர்சால் பொறியாளர் வேங்கூர்.

1) அனைத்து தோழர்க ளுடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது

2) நகர திராவிடர் கழகம் விடுதலை வாசகர் வட்டம் மற்றும் கூட்டணி அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழர் தலைவரால் அறிவிக் கப்பட்ட ' மயக்க பிஸ்கெட்டு கள் ஒரு எச்சரிக்கை' என்னும் புத்தகத்தை நான்காயிரத் திற்கு அதிகமான புத்தகத்தை அய்ம்பதிற்கும் மேற்பட்ட தோழர்களுடன் வீடுதோறும் கொடுத்து பிரச்சாரம் செய் வது என தீர்மானிக்கப்படுகிறது

3) விடுதலை வாசகர் வட் டம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் அரங்கக் கூட் டம் நடத்துவது என தீர்மா னிக்கப்படுகிறது.

4)தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழாவை தெரு முனை பிரச்சார கூட்டமாக திருவானைக்காவல் திருவரங் கம் பகுதிகளில் மாவட்ட கழகம் மற்றும் திருவரங்கம் நகர கழக தோழர்களும் இணைந்து நடத்துவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக் கப்படுகிறது.

Comments