எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் - இந்துத்துவா. எல்.ஆர்.ஈஸ்வரியின் செல்லாத்தா - திராவிடம்.
பஞ்சகச்சம்,
பஞ்ச கவ்யம் - இந்துத்துவா. லுங்கி, மாட்டுக்கறி பிரியாணி - திராவிடம்.
மதுரை
வீரனை வாசல் படிக்கு வெளியே நிறுத்தி வைத்தது - இந்துத்துவா.
அவன்
பேரன், பேத்திகளுக்கு இடஒதுக்கீடு அளித்து இணைத்துக் கொண்டது - திராவிடம்.
நாராயணனை
மோகித்த நாரதனை அலியாக்கி அவமதித்தது - இந்துத்துவா.
அலியை
அரவாணியாக்கி, பின் திருநங்கையாகக் கொஞ்சி மகிழ்ந்தது - திராவிடம்.
பிரம்மனின்
உடலுக்கு வெளியே பிறந்தவர்கள் பஞ்சமர் என்றும், அவர்களைப் பார்த்தாலே தீட்டென்று தள்ளி வைத்தது - இந்துத்துவா.
திராவிடருக்கு
எல்லாம் ஆதிதிராவிடர் அவர்கள் தான் என உரிமை கொண்டாடியது
- திராவிடம்.
பெண்களுக்குப்
பொட்டுக் கட்டி பொது மகளிர் ஆக்கியது - இந்துத்துவா.
தேவதாசிகளை
ஒழித்து, பெண்களுக்குச் சொத்தில் சரிபாதி அளித்தது - திராவிடம்.
தமிழ்
நீச பாஷை எனக் கேலி பேசியது - இந்துத்துவா.
உலகச்
செம்மொழிகளில் தமிழும் ஒன்றென நிலை நாட்டியது - திராவிடம்.
சகோதரனையும்
சடுதியில் கொல் என்ற கீதையை வேதம் என்றது - இந்துத்துவா.
யாதும்
ஊரே யாவரும் கேளிர் என்பதே வாழ்நெறி என்றது - திராவிடம்.
கற்பிக்காத
கல்விக்குக் கூட கட்டை விரலை காணிக்கைக் கேட்டது - இந்துத்துவா. எல்லோருக்கும் உணவுடன் கூடிய இலவசக் கல்வியை அளித்தது - திராவிடம்.
சிவனின்
தொலைத் தூர தரிசனம் கோரி வந்த நந்தனை உயிரோடு எரித்தது - இந்துத்துவா. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றியது - திராவிடம்.
இதுதான்
- திராவிடம்
அதுதான்
- இந்துத்துவா
முக
நூலில் இருந்து: வி.சி. வில்வம்
திராவிட
ஆய்வு