காரைக்குடி,ஜன.20- காரைக்குடி யில் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகள் கடந்த நான்கு ஆண்டு களுக்கு முன்பு துவக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் நகரின் அனைத்து சாலை களும் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகவும் ஆங்காங்கே கிண றுகள் போல காட்சியளிக்கிறது.
இந்த
சாலைகளில் பயணம் செய்த பலரும் கீழே விழுந்து அடிபட்டு கை கால் முறிவு
ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையெல்லாம்
கண்டு கொள் ளாமல் ஆளும் அரசு மெத்தனம் காட்டி வருவதை கண்டித்தும் துரிதமாக பணிகளை நிறைவு செய்ய வேண்டியும் தி.மு.கழகத்தின்
சார்பில் சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடைபெற்றது.
தி.மு.க.மாநில
இலக்கிய அணி தலைவரும் மேனாள் அமைச்சரு மான மு.தென்னவன் தலைமை
ஏற்று சாலையில் படுத்து உருண்டு தொடங்கி வைத்தார். ஏ.அய்.டி.யூ.சி. மாநில
குழு உறுப்பினர் பழ.இராமச் சந்திரன்,
நகர் தி.மு.க.செயலாளர் நா.குணசேகரன், மேனாள்
நகர் மன்ற தலைவர் சே.முத்துத்துரை, மாவட்ட
இளைஞரணி அமைப்பா ளர் பா.செந்தில்குமார், நகர் துணை
செயலாளர் சொ.கண்ணன், மாவட்ட
பிரதிநிதிகள் இராம.அன்பழகன், சேவியர், நகர இளைஞர் அணி செயலாளர் மூர்த்தி, நகர் மாணவர் அணி அமைப்பாளர் அசரப், பஞ்சாலை தொ.மு.ச.
அமைப்பாளர் ஆ.மலையரசன் உள்ளிட்ட
அய்நூறுக்கும் மேற்பட்ட தோழர் களும் பெண்களும் கலந்து கொண் டனர்.