சுபாஷ் சந்திரபோஸைக் கொன்றது காங்கிரஸ் காரர்களாம்: சாமியாரின் விபரீத பேச்சால் சர்ச்சை

புதுடில்லி. ஜன.25-  சுபாஷ் சந் திரபோஸை கொலை செய் தது காங்கிரஸ் தான் என்று சாமியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாக்சி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விடுதலைக் காகப் பாடுபட்ட மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக அறி யப்படுபவர் சுபாஷ் சந்திர போஸ். பிரிட்டிஷாரை அகிம்சை வகையில் வெற்றிபெற முடி யாத என்று நம்பிய போஸ், இதற்காக ராணுவத்தையும் கட்டமைத்தார். இந்தியாவின் முதல் ராணுவமாக இது பார்க்கப்படுகிறது.

சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒடிசாவின் கட் டாக் நகரில் பிறந்தவர், இவ ரது 125ஆவது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் மிக வும் கோலாகலமாகக் கொண் டாடப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடை பெற்ற போஸ் பிறந்த நாள் பேரணியில் பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சாக்சி மகா ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அப் போது பேசிய அவர், "காந்தி யும் சரி, நேருவும் சரி சபாஷ் சந்திர போஸ் அளவுக்கு மக்க ளிடையே புகழ்பெற்ற தலை வர்கள் இல்லை. எனக்கு என் னவோ காங்கிரஸ் கட்சிதான் போஸை கொன்று விட்டார் கள் என்ற சந்தேகம் உள்ளது" என்று சர்ச்சைக்குரிய வகை யில் பேசினார்.

சுதந்திரத்திற்காகப் போராடிய போஸ், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகி றது. இது குறித்து 2017ஆம் ஆண்டு தகவல் அறியும் உரி மைச் சட்டத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கும் மத்திய அரசு இதே பதிலைக் கூறியது. இருப்பினும், போஸ் அந்த விமான விபத்தில் சாகவில்லை என்றும் அவர் சோவியத் யுனியனுக்கு தப்பிச் சென்று, இறுதிக்காலம் வரை அங்கு வாழ்ந்ததாகவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின் றனர்.

Comments