மின்வாரியத்தில் பதவிகளை ஒழிப்பது நியாயமல்ல: தொழிற்சங்கத்தினர் கடிதம்

சென்னை,ஜன.5- மின்வாரியத்தில் பதவிகளை ஒழிப்பது நியாயமான செய லல்ல என மின்வாரிய தலைவருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பி யுள்ளனர்.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள் ளதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிர்வாக கிளை, தமிழகம் முழுவதும் பணியாற்றுபவர்களுக்கான நிர்வாகப் பணிகளை செய்து வரக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு இளநிலை உதவியாளர் முதல் முதுநிலை பணித் தொகுதி அலுவலர் வரை பணியாற்றி வருகின்றார்கள்.

குறைந்த அளவே உயர் பதவியான முதுநிலை பணித் தொகுதி அலுவலர் (எஸ்பிஓ) உள்ளனர்.  இந்நிலையில் ஒரு எஸ்பிஓ பதவியையும், 51 உதவியாளர் பதவிகளையும் ஒழித்து விட்டு 30 இளநிலை உதவியாளர் பதவி அளிப்பதற்காக கோர்ப்பு ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளதாக அறிகிறோம். மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்பிட முன்வராமல் குறைந்தபட்ச பதவி எண்ணிக்கை ஒப்புதல் தந்துவிட்டு இருக்கக் கூடிய அடுத்தடுத்த பதவிகளை ஒழிப்பது நியாயமான செயலல்ல.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Comments