தாஜ்மஹாலில் காவிக் கொடியாம்: ஆர்.எஸ்.எஸ். அத்துமீறல்!

ஆக்ரா, ஜன.8 தாஜ் மஹாலில் காவிக் கொடியை காட்டி பார்வையாளர்களை மிரட்டிய விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தாஜ் மஹால் வளாகத்திற்குள் நின்று காவி கொடிகளை காட்டி பார்வையாளர்களை மிரட்டி யுள்ளனர். இந்த காணொலி சமூக வலை தளங்களில் பரவியது. இந்நிலையில், இதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காணொலியில், மூன்று பேர் காவிக் கொடிகளை வைத்துக்கொண்டு கேமராவை நோக்கி நிற்பது தெரிகிறது. காட்சியை படம்பிடித்த நபரோ, கேமரா ப்ரேம் சரியாக இருப்பதாக கூறுகிறார். மேலும் அங்கு பார்வையிட்ட சிலரிடம் இனி இதுதான் என்று மிரட்டல் விடும் தொனியில் பேசியுள்ளார்.

இந்து ஜக்ரன் மஞ்ச் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய இளைஞரணி பிரிவு என்பது குறிப்பிடத் தக்கது. தாஜ் மஹாலில் காவிக் கொடியை அசைத்ததற்காக கவுரவ் தல்வார், ரிஷி லவானியா, சோனு பகேல், விஷேஷ் குமார் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.

இதில் கவுரவ் தல்வார் என்பவர் இந்து ஜக்ரன் மஞ்ச் அமைப்பின் மாவட்ட தலைவர் என தெரியவந்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153, குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தாஜ் மஹாலில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்கு இருக்கிறது.

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கண் காணிப்பு மற்றும் புலனாய்வு பணி

களை மறுஆய்வு செய்ய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை முடிவு செய் துள்ளது.

 

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image