தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் தமிழக அரசு உத்தரவு

வேலூர்ஜன.1 தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற் படுத்தப்பட்டோர் விடுதிகளில் பணியாற்றும் பகுதிநேர தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுதமிழகத் தில் பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத் தப்பட்டோர்சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறையின் கீழ் 1099 பள்ளி விடுதிகளும், 255 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன

இவ்விடுதிகளில் 100 மாணவமாணவிகளுக்கு மேல் தங்கி படிக்கும் 66 விடுதிகளுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் முழு நேர துப்புரவு பணியா ளர்களும், 100 மாணவமாணவிகளுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் 2 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதிநேர தூய்மை பணி யாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்இவர்களின் தொகுப்பூதியம் பின்னர் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர்மிக பிற் படுத்தப்பட்டோர்சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் பகுதிநேரமாக பணியாற்றும் 517 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,100-ரூ.12,500 என சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளதுஇத்தகவலை பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Comments