முட்டுக்கட்டை

மதம் என்பது இந்த உலக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படு வதில்லை. அதன் கவனமெல்லாம் மறு உலகத்தைப் பற்றியதுதான். அதுதான் அப்படியென்றால், தற்கால சமுதாய ஸ்தாபனங்களோ மக்களின் சமதர்மத்தை அழித்து தீங்கு விளைவிப்பனவாக இருக்கின்றன. ஜாதிப் பிரிவு முறை, பால்ய விவாகம், கூட்டுக் குடும்ப நிர்வாக வழக்கம், தர்ம திட்டம் முதலியனயாவும் சனங்களின் சமுதாய முன்னேற்றத்திற்கும் தொழில் அபிவிருத்திக்கும் முட்டுக் கட்டையாய் இருந்து வருகின்றன.

ஜாதி முறை, சமுதாயப் பிற்போக்கிற்கும் தொழில் மந்தத்திற்கும் பிரதானக் காரணமாயிருக்கிறது. ஜாதிக் கொள்கையில் ஒருவிதமான கேவலமான இறுமாப்பு இருக்கிறது. அதனால் சிலர் பயனற்ற கர்வம் கொள்ளுகிறார்கள். பலர் சிறுமையும் அதைரியமும் அடைகிறார்கள். ஆகவே, இத்தகைய நிலைமையில் உழைப்புக்குள்ள உண்மை மதிப்புப் போய் விடுகிறது.

மதஸ்தாபனங்களில் நடைபெற்று வரும் தர்ம கைங்கர்ய முறை களால், சனங்களில் அநேகரிடம் சோம்பல் வளருவதற்கு இடம் ஏற்பட்டு விடுகிறது.

- அறிஞர் அண்ணா, பெரியபுராணப் புதையல்

திராவிட நாடு" இதழ் (1.7.1945)

தமிழ்மீது சங்கராச்சாரியாரின் துவேஷம்

அக்காலத்தில் சங்கராச்சாரியாராயிருந்த பெரியவர் காரைக் குடிக்கு வந்தார். பள்ளிக்கூடத்திற்கு வந்து மாணவர்களிடையே பேசினார். அவரிடம் சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள ஊரிலிருந்து பெரும்பான்மையோர் ஆர்வத்தோடிருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் பலரும், தலைமை ஆசிரியர் உள்பட, அவரைக் கண்டு தரிசித்தனர். ஆனால் என் தந்தையார் மட்டும் போகவில்லை.

பிறகு சில நாட்கள் கழித்துத் தலைமையாசிரியரின் வற்புறுத்த லுக்கு இணங்கி ஆச்சாரியாரைக் கண்டு தரிசித்துவிட்டு வந்தார். தொடக்கத்தில் மடத்திற்குச் செல்ல அய்யரவர்கள் ஏன் தயங்கினார் கள் என்பதை அறிய விரும்பிய மாசிலாமணி தேசிகருக்கு அய்ய ரவர்கள் கீழ்க்காணுமாறு கூறினார்:

'தமிழ்நாட்டிலே தமிழ் மக்களால் பாராட்டப்படும் பீடத்தினர் அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலே தான் பேசுவார்களாம். தமிழிலே பேசினால் ஆசாரக் குறைவு என்ற கருதினார்கள். பூஜை முடித்துப் போஜனம் ஆனபின்தான் தமிழில் பேசுவார்களாம். ஆதலால் அரிய தமிழை அநாதரவு செய்கிறவர் களை நான் ஏன் பார்த்தல் வேண்டும்?' என்றார்.

- ‘நான்எனும் நூலில் நா.சுப்பிரமணி (பக். 65, 66)

Comments