கோயிலுக்குள் பெண்ணிடம் பாலியல் வன்முறை கொலை தலைமறைவான அர்ச்சகர் கைது

லக்னோ,ஜன.9- உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்திலுள்ள மேவ்லி கிராமத்தில், அங்கன் வாடியில் பணியாற்றிவந்த பெண் அந்த ஊரிலுள்ள சிவன் கோயிலுக்கு  சென்றார்.

அப்பெண்ணை, கோயிலுள் வைத்தே அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர், மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கி படுகொலை செய் தனர்.

பெண்ணின் பிறப்பு றுப்பை சிதைத்ததுடன், கால், விலா எலும்புகளை நொறுக்கியும், குடலை கம்பியால் குத்திக் கிழித்தும் நடந்த இந்த படுகொலை, .பி. மட்டுமன்றி, நாடு முழு வதும் பரபரப்பை ஏற்படுத் தியது.

இந்த சம்பவத்தில் தாம தமாகவே நடவடிக்கையில் இறங்கிய .பி. பாஜக அர சின் காவல்துறை கோயில் அர்ச்சகர் மகந்த் பாபா சத்ய நாராயணனை விட்டுவிட்டு, அவரது உதவியாளர்களான வேத்ராம், ஜஸ்பால் ஆகி யோரை மட்டும் கைது செய்தது. அர்ச்சகர் சத்ய நாராயணன் தலைமறைவாகி விட்டதாகவும், அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர் களுக்கு ரூ.50 ஆயிரம்  வழங்கப் படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில், சம்பவம் நடந்த மேவ்லி கிராமத்திற்கு உள்ளேயே தனது ஆதர வாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த அர்ச்சகர் சத்யநாராயணன் (வயது 45) வியாழனன்று  (8.1.2021) இரவு கைது செய்யப்பட்டுள் ளார். அவர் மீதுஇந்தியத் தண்டனைச் சட்டம் 376 (டி) மற்றும் 302 ஆகிய பிரிவு களின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சகர் சத்யநாராயண னின் ஆசிரம அறையிலும், கட்டிலிலும் ரத்தக்கறை களை கண்டறிந்துள்ள காவல்துறையினர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்ணின் ரத்தக் கறை படிந்த சேலையையும் கோயிலுக்கு அருகில் கைப் பற்றியுள்ளனர்.

முக்கியக் குற்றவாளியான அர்ச்சகர் சத்யநாராயணன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புதான் மேவ்லி கிரா மத்திற்கு வந்துள்ளார் என் றும், இங்கிருந்த பாழடைந்த சிவன் கோயிலை புனர மைத்த அவர், அருகிலேயே ஆசிர மம் ஒன்றை அமைத் துத் தங்கிக் கொண்டு, கோயிலின் அர்ச்சகராகவும் பணியாற்றி வந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

Comments