தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் தளபதி மு.க.ஸ்டாலின்தான் முதல் அமைச்சர் வேட்பாளர் ராகுல்காந்தி உறுதி


கரூர், ஜன.26- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.. தலைவர் தளபதி ஸ்டாலின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது தந்தையார் கலைஞர்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தோமோ அதே நம்பிக்கையை தளபதி ஸ்டாலின் மீதும் வைத்து உள்ளோம். எனவே தமிழகத்தில் தி.மு.-காங்கிரஸ் கூட் டணியின் முதல்-அமைச்சர் வேட் பாளர் தளபதி முக.ஸ்டாலின்தான்.

தமிழகத்தில் நான் இதுவரை சுற்றுப்பயணம் செய்த இடங்களில் எல்லாம் தி.மு.- காங்கிரஸ் கூட் டணிக்கு நல்ல எழுச்சி இருப்பதை உணர்கிறேன். இது கூட்டணிக்கு வெற்றியை தேடித்தரும். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். சிந் தனையை உருவாக்க பாரதீய ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது தொடர்பான இரகசிய இராணுவ தகவல் சம்பவம் நடப் பதற்கு 3 நாட்களுக்கு முன்பே முக் கியமான ஊடகவியலாளர் ஒரு வருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப் பப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட முக்கியமான 5 நபர்களுக்கு மட் டுமே தெரிந்த இந்த இராணுவ ரகசியம் ஊடகவியலாளருக்கு எப்படி கசிந் தது என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இந்த இரகசிய தகவல் எதிரி நாட்டுக்கும் கசிந்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இது மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. இதன் மூலம் நாட்டின் இரகசிய பாது காப்பு பிரமாணத்தையும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீறி இருக் கிறார்கள். எனவே இதுபற்றிய உண்மையை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டியது பிரதமரின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கரூர் மாரிக் கவுண்டன்பாளையம் வாங்கல் கிராமத்திற்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு கட்சி நிர்வாகிகளுடன் மாட்டு வண்டியில் சவாரி செய்தார். மாட்டு வண்டியை கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி ஓட்டிச்சென்றார். சுமார் 200 மீட்டர் தூரம் மாட்டுவண்டியில் பயணம் செய்த ராகுல்காந்தி அங்கு தென்னந்தோப்பில் கூடியிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடி னார். தமிழகத்தில் 3 நாள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி நேற்று மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டில்லி சென்றார்.

Comments