கேளிக்கை வரி செலுத்த சலுகை, கால அவகாசம் தமிழக அரசு அளிக்க வேண்டும்

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வலியுறுத்தல் 

சென்னை,ஜன.12- தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் (நேற்று 11.1.2021)விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு, கரோனா பரவலின் தொடக்கத்திலிருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும் - அனைத் துத் தொழில்களும் வருமான இழப் பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகை களையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், திரைத் துறைக்கான சலுகைகளையும் கேரள இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31 வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.

திரையரங்குகள் 50விழுக்காடு இருக்கைகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், கடந்த 10 மாதங்களுக்கான திரையரங்க மின் கட்டணம் 50விழுக்காடு தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்தவும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள அரசு.

தமிழகத்தில் திரைத்துறையைக் கனவுத் தொழிற்சாலை என அழைக் கின்றனர். பல ஆயிரம் குடும்பத் தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக் கத்தால் அத்துறை சார்ந்த அனைத் துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை .தி.மு.. அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

திரைத்துறை மட்டுமின்றி, கரோனா பேரிடர் காலத்தில் பாதிப் பிற்குள்ளான அனைத்துத் தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தினை மீட் டிடும் வகையில் இத்தகைய சலு கைகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Comments