தூத்துக்குடியில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி, ஜன. 12- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவரின் 88ஆவது பிறந்த நாள் விழா, புத்தகங்களின் அறிமுக விழாவாகவும், சுயமரியாதைக் குடும் பங்கள் கலந்து உறவாடிடும் விழாவா கவும் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

13.12.2020 அன்று காலை 10 மணி யளவில் பெரியார் மய்யத்தில் விழா தொடங்கி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி தலைமை வகித்தார். பெரியார் மய்யப் பொறுப்பாளர் சு.காசி, பொதுக்குழு உறுப்பினர் பெ.காலாடி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் .செல்வ ராஜ், மாவட்ட மகளிரணி அமைப் பாளர் செ.ஜெயா, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் பா.சவுந்திரம், .வெங்கட்ராமன், ஒன்றிய அமைப் பாளர் கோ.முருகன், ஒன்றியத் தலை வர் சு.திருமலைக்குமரேசன், கி.கலைச்செல்வன், .பெரியார்தாசன், வீ.மதிவாணன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாவட்டத் துணைச்செயலா ளர் இரா.ஆழ்வார் வரவேற்றார்.

முதல் நிகழ்வாக நெல்லை மாவட் டத் தலைவர் இரா.காசி நூல்களை வெளியிடத் தோழர்கள் பலர் பெற்றுக் கொண்டார்கள். அடுத்து, “தந்தை பெரியாரின் அடியொற்றித் தமிழர் தலைவர்என்ற தலைப்பில் மண்டலத் தலைவர் மா.பால்ராசேந் திரம் சிறப்புரையாற்றினார். இறுதி யாகப் பெரியார் பிஞ்சுகள் கோ.காவியா, செ.மாரிசா, தனகா, செந் தமிழ், சந்தியா, பிரபா, கலைமணி, யுவன் ஆகியோர் உரையாற்றினர். அடுத்து விளையாட்டுகள் நடத்தப் பட்டன. கலந்து கொண்ட குழந்தை களுக்கு நெல்லை மாநகரத் தலைவர் பி.இரத்தினசாமி பரிசு வழங்கினார். பரிசினை நெல்லை மாவட்டச் செய லாளர் .இராசேந்திரன் - பானுமதி இணையர் நன்கொடையாக வழங்கி னர். இறுதியாக மாவட்ட இளைஞ ரணித் தலைவர் .கந்தசாமி நன்றி கூற விழா 2 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் இறைச்சி உணவு வழங்கப்பட்டது. பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ், செ.செல்லத் துரை, சு.சுப்புராஜ், செ.இராதாகிருஷ் ணன் ஆகியோர் விழா முன்னேற்பாடு களைச் செய்தனர். தோழர்கள் அனை வரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments