தருமபுரி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் அனைவருக்கும் பொதுவானவர் கருத்தரங்கம்
தருமபுரி, ஜன. 5-- தருமபுரி விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 2-.1.-2021 சனிக் கிழமை மாலை 3 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில்  மூன்றாவது தொடர் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்க நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் .சின்னராஜ் தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் .சுதாமணி வரவேற் புரையாற்றினார்.       

திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட செயலாளர் மாதன், மண்டல தலைவர் .தமிழ்ச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்த ராஜ், ஆகியோர் முன்னிலை ஏற்றனர். .திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினர் இரா.வேட்ராயன் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன் கருத்துரையாற்றினார்.

மேனாள் மாவட்ட கல்வி அலுவல ரும் தர்மபுரி மாவட்ட மய்ய நூலக வாசகர் வட்ட தலைவருமான முனைவர் சி. இராஜசேகரன் "அனைவருக்கும் பொது வானவர் அண்ணல் அம்பேத்கர்" என் னும் தலைப்பில் சிறப்புரையாற் றினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச் செல்வி, மாநில மனித உரிமை கழக செயலாளர் துரைராஜ், மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் ஆசிரியர் கதிர் செந்தில், நகர திராவிடர் கழகத் தலைவர் கரு.பாலன், மண்டல திரா விடர் மாணவர் கழக செயலாளர் .செல்லதுரை, மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் தீ.ஏங்கெல்ஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .அர்ஜுனன், மாரவாடி கிளைக் கழக தலைவர் ஊமை.காந்தி, மேனாள் மாவட்ட நகர அமைப்பாளர் .இராமச் சந்திரன்,மற்றும் பலர் கலந்து கொண் டனர். இறுதியாக  விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் மல்லிகா நன்றி கூறினார்

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image