டில்லி போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறைக் காடாக்கிய பா.ஜ.க. ஆதரவாளர்

புதுடில்லி, ஜன. 27 விவசாயிகளின் பேரணியின் போது செங்கோட் டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது என பா.ஜ.க.வினரால் சர்ச்சையான நிலையில், அங்கு போராட்டத்தை தூண்டியது பாஜக ஆதரவாளரும், பஞ்சாப் திரைப்பட நடிகருமான தீப் சித்து என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோ லின் உதவியாளராக இருந்து பாஜக விற்காக தேர்தல் பணியற்றியவர் தீப் சித்து. இவர் போராடும் விவசாயிகளுக்காக சம்பு மோர்ச்சா என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சித்து வந்தார். ஆனால் அவரது பாஜக பின்புலம் மற்றும் அவரின் மோடி ஆதரவு காரணமாக  விவசாய அமைப்புகளின் தலைவர்கள் அவரைப் போராட்டத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்தனர். மேலும் போராட்டத்தினர் யாரும் அவரது உத்தரவுகளைப் பின்பற்றவேண்டாம், இவர் மோடி _அமித்ஷாவின் உத்தர விற்கு ஏற்ப குழப்பத்தை விளைவிக்க வந்தவர் என்று கூறி அவரை புறக்கணித்து வந்தனர்.

டில்லியில் காவல்துறையினர் அனுமதியளித்த பகுதியில் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டுவந்த தீப் சித்துவின்   அமைப்பு டில்லிக்கு உள்ளே பேரணி நடைபெறும் என அறிவித்ததாகத் தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாகவே அவ ரது ஆதரவாளர்கள்  அனுமதிக்கப் பட்ட நேரத்திற்கு முன்பாகவே பேரணியை தொடங்கியதுடன், தனது அடியாட்களை வைத்து மத்திய டில்லி பகுதியில் காவல்துறை அனுமதியளித்த பாதையை விடுத்து, செங்கோட்டையை நோக்கிச் சென்றனர். விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் செங்கோட்டையைச் நோக்கிச்செல்வது போன்ற திட்டம் எதுவும் இல்லாத நிலையில் திடீரென சில டிராக்டர்கள் டில்லி செங் கோட்டையை நோக்கிச் சென்றன.  இதை தடுக்காமல் அவர்களை செங் கோட்டை வரை செல்ல அனுமதித் தோடு பாதுகாப்பு மிகுந்த செங் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் ஏறும் வரை டில்லி காவல்துறையும், அங்கிருந்த துணை ராணுவப் படையினரும் வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் செங்கோட் டையின் ஒரு பகுதியில் சீக்கியர்களின் மதக்கொடியை இவரும், இவரது ஆதரவாளர்களும் ஏற்றினர். இது மிகவும் கடுமையான அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்திய குடியரசு தினவிழாவில் நாட்டுப் பாதுகாப்பின் வலிமையை பறைச்சாற்றும் வண்ணம்  தேசியக் கொடி ஏற்றப்படும் செங்கோட் டையில் நடந்த இந்த வன்முறை மற்றும் சீக்கிய கொடி ஏற்றம் குறித்து பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீப் சித்து, தங்களது எதிர்ப்பை காட்டுவதன் அடையாள மாகவே செங்கோட்டையை நோக்கி பேரணி சென்றதாகவும், அங்கு தேசியக் கொடியை இறக்க வில்லை என்றும், தங்களுடைய கொடியை மட்டும் ஏற்றியதாகவும் கூறியுள்ளார்.

60 நாட்களுக்கு  மேலாக அமை தியாக சென்றுகொண்டிருந்த விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு பாஜக ஆதரவாளர்களால் வன் முறைக்காடாக்கி விவசாயிகளை மக்கள் மத்தியில் வன்முறையாளர்கள் என்று காட்ட சதித் திட்டமிட்ட பாஜகவினரின் திட்டம் சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டு விட்டதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக எந்த நட வடிக்கையும் எடுக்காமல் தயங்கி  வருவதாக போராடும் விவசாயிகள் அமைப்பினர் கூறுகின்றனர்.

Comments