ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் உள்ள பயத்தையும் குழப்பத்தையும் நீக்கி வெளிப்படத்தன்மையுடன் அரசு நடந்து கொள்ள வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் கரன் தப்பார் குறிப்பிட்டுள்ளார்.

·     வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்திவைக்கும் மத்திய அரசின் யோசனையை விவசாய அமைப்புகள் நிராகரித்துள்ளன. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 10 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

·     அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனின் பேச்சு பிளவுண்ட அந்நாட்டு மக்களை இணைக்கும் ஒன்றாகும். அது உலகத்திற்கே நல்லது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மோடி அரசின் வேளாண் சட்டங்கள், மாநில உரிமைகளை பறிக்கும்; விவசாயத்தில் சிலரின் ஏகபோகத்திற்கு வகை செய்து விவசாயிகளை பாதிக்கும் என மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· உயர் கல்வியறிவு மட்டுமே ஒருவரின் சமூக மற்றும் தார்மீக சித்தாந்தங்களின் துல்லியமான அளவாக இருக்காது என்ற அடிப்படையில், கேரளாவில் மதசார்பற்ற திருமண நிலையத்தை பாலக்காட்டைச் சேர்ந்த அனீஸ் எனும் தனி மனிதர் துவக்கியுள்ளார். இதற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

· உ.பி.யில் அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்கு நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் நன்கொடை கட்டாயம் தர வேண்டும் என்பதற்கு  எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

· வேளாண் சட்டங்கள் குறித்து மோடி அரசாங்கத்தின் 'லாலிபாப்' நிராகரிக்கப்படுவது விவசாயிகளின் விழிப்புணர்வைக் குறிக்கிறது. தினசரி 'ஜும்லாக்கள்' மற்றும் அட்டூழியங்களை நிறுத்துங்கள், விவசாய எதிர்ப்பு சட்டங்களை வெறுமனே ரத்து செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

· "இந்திய அரசியலமைப்பின் விதிகளை முறையாக அமல்படுத்தினால் பத்தாண்டிற்குல் நமது சமுதாயத்தில் ஜாதியை அழிக்க உதவும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அவருக்கு பெரியார் பன்னாட்டமைப்பு, ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கப்பட்டதற்காக விழுப்புரத்தில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கூறினார்.

· சமீபத்தில் இணைய வழி தேர்வுகளில் கலந்து கொண்ட பல இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள், தேர்வுகள் இல்லாமல் ‘அறிவிக்கப்பட்ட’ தேர்ச்சி பெற்றாலும் வேலைகள் இல்லை என்று கூறுகிறார்கள். இளம் தமிழக வாக்காளர்களுக்கு வேலையின்மை என்பது வருகின்ற தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையாகப் பேசப்படும்.  

டைம்ஸ் ஆப் இந்தியா:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் புதுச்சேரி அரசின் சட்டம், தகுதி திறமையை நீர்த்துப் போகச் செய்யும் என மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

22.1.2021


Comments