திராவிடர் திருநாள்

திராவிடர் திருநாள் மனிதனை மனிதனாக மதிக்கும் மகத்தான விழா! மற்ற பண்டிகைகளைப் போல் பொங்கல் தெரிய காலண்டரைப் புரட்ட வேண் டாம். பல வைதீக மூடப் பழக்கவழக்கத் துடன் இணைத்து மனி தனின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைகளைப் போட்டு, ஓரினம் மட்டும் தன்னை உயர்ந் தோனாக்கி, மற்ற மக்களை அடிமைப் படுகுழியில் தள்ள, வாழ வழி வகுத்துக் கொண்டது. வஞ்சக எண்ணங் கள் நமது திருநாட்களில் கிடையாது. மனிதனை மனிதனாகவும், உழைப்புக்கு மதிப்பு அளித்து சமத்துவ நீதியுடன் வாழும் நிலையை அடிப்படையாகவும் கொண் டதுதான் திராவிடர் திருநாளான பொங் கல் விழா. நமது இனத்தாருக்கு அமைந்த உயர்ந்த பண்பாகக் கொண்ட விழா!

- டாக்டர் கலைஞர்

நம் நாடு, 22.1.54

Comments