போராட்டக் களத்தில் உள்ள புதுவை முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து-ஆதரவு

‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி புரியும் புதுவை மாநில முதலமைச்சருக்கும், சுதந்திரமாக செயல்பட்டு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றவிடாமல், அவரது ஆட்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவரும் புதுவையின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை அகற்றுமாறு, புதுவை மாநில முதல்வரும், அமைச்சர்களும் புதுவையில் மற்ற தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நடத்தும் அறவழிப் போராட்டத்திற்கும் திராவிடர் கழகத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு. போராட்டம் வெற்றியடைய  உளங்கனிந்த வாழ்த்துகள்.''

- இவ்வாறு புதுவையில் போராட்டக் களம் காணும் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களுக்குத் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில்...

கரோனா தொற்று காரணமாக, முன்பு நேரில் வந்து வாழ்த்துச் சொன்னதுபோல்,  இம்முறை வர இயலாமைக்கு வருந்துவதாகவும், அதற்கு பதில் புதுவை மாநில திராவிடர் கழகத்தவர் கலந்துகொண்டு - தங்களது ஒத்துழைப்பையும், ஆதரவையும் புதுவை மாநிலத் தலைவர் தோழர் சிவ.வீரமணி அவர்கள் தலைமையில் நல்குவர் என்றும் தொலைபேசிமூலம்  இன்று (10.1.2021) காலை புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு திரு.நாராயணசாமி அவர்களிடம், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் தெரிவித்தார்.

அது கேட்டு மிக்க மகிழ்ச்சியுடன் தனது சிறப்பான நன்றியைத் தெரிவித்தார் புதுவை முதலமைச்சர் அவர்கள்.

நீதிமன்றத் தீர்ப்பைக்கூட மதிக்காமல் அங்கு துணை நிலை ஆளுநர்மூலம், சிறந்த ஆட்சித் திட்டங்களுக்குத் தடை போடும் நிலைக்கு மக்கள் தேர்தல் சமயத்தில்

பா... அணிக்கு சரியான பாடம் கற்பிப்பது உறுதி!

Comments