ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     மோடி அரசின் புதிய நாடாளுமன்றம் கட்டுதல் உள்ளிட்ட மத்திய விஸ்டா திட்டத்திற்கு, அதிக ஒப்பந்த விலையைக் குறிப்பிட்ட குஜராத் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஏன் பொதுவான ஒரு போட்டி நடத்தப்படவில்லை என்பன போன்ற கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி கன்னா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதை எழுத்தாளர் பவன் கே.வர்மா எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மோடி அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி அனைத்து மாநில ஆளுநர் மாளிகை முன்பும் வருகிற சனவரி 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது.

·     ட்ரம்பின் தேர்தலைதிருடசதி செய்ததாக டிரம்பின் ஆதரவாளர்கள் ஆண்டிஃபாவைக் குற்றம் சாட்டினால், மோடியின் ஆதரவாளர்கள் மோடியின் அரசாங்கத்தையும் அவரது கொள்கைகளையும் விமர்சிக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னால்இடதுசாரிகள், லிபர்ட்டுகள் மற்றும் லூட்டியன்ஸ்உள்ளனர் என்று உறுதியாக நம்புகிறார்கள் என எழுத்தாளர் தல்வீன் சிங் புதிய இந்தியன் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     ஜாதி அடையாளம் காணும் ஸ்டிக்கர்களைத் தாங்கிய வாகனங்களில் சென்ற சுமார் 600 பேருக்கு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் காவல்துறை அபராதங்கள் விதித்தது.

·     பிரதமர் நரேந்திர மோடி குறித்து சுட்டுரையில் விமர்சனம் செய்ததற்காக மூத்த விமானி மாலிக்கை கோ ஏர் விமான நிறுவனம் பதவி நீக்கம் செய்துள்ளது.

தி டெலிகிராப்:

·     அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சுட்டுரை பதிவில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பதிவிடுகிறார் என்பதற்காக சுட்டுரைக் கணக்கை அந்நிறுவனம் முடக்கியதற்கு கருநாடகத்தைச் சேர்ந்த பாஜகவின் எம்.பி. தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்கத் தலை நகரில் வன்முறை ஏற்படுத்திய டிரம்ப் ஆதரவாளர்கள் குறித்து எந்த கருத்தும் வெளியிடவில்லை.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

· இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ஆம் தேதி அன்று தொடங்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் (பிஅய்பி) தெரிவித்துள்ளது.தடுப்பூசி போடுவதில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் 3 கோடி பேர் வரை இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு கீழே இருந்தாலும் இணை இடர்ப்பாடுகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பிரிவில் 27 கோடி மக்கள் வருவார்கள் என்று இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

- குடந்தை கருணா

10.1.2021

Comments