தை!
தை! தை திருவிழா
தமிழர்களின்
பெருவிழா
பொங்கல்
எனும் ஒருவிழா - நாம்
போற்றிப்
புகழும் திருவிழா!
குடும்பமாக
ஒன்று சேர்ந்து
குதூகலிக்கும்
ஒருவிழா
குழந்தைகளும்
மகிழ்வுடனே
கொண்டாடும்
திருவிழா! (தை)
இயற்கை
தன்னைப் போற்றுகின்ற
இனிமையான
ஒருவிழா
இருளை
நீக்கி ஒளிவழங்கிடும்
சூரியனின்
திருவிழா!
உழவருக்கு
நன்றிசொல்லி
உழைப்பைப்
போற்றும் ஒருவிழா
உழைப்பில்
வந்த அரிசி பொங்கி
குலவை
கொட்டும் திருவிழா!
இதயம்
கனிந்த வாழ்த்துச் சொல்லும்
இன்பமான
ஒருவிழா
இனிக்கும்
பொங்கல் கரும்பு தின்னும்
இன்பமான
திருவிழா! (தை)
தமிழர்களின்
பண்பாட்டைப்
பறைசாற்றும்
ஒரு விழா
தமிழரெல்லாம்
கொண்டாடும்
பகுத்தறிவுத்
திருவிழா!
ஜாதிமத
பேதமின்றி
சகலருக்கும்
ஒருவிழா
மூடத்தனம்
ஏதுமில்லா
முழுமையான
திருவிழா! (தை)
- மு.கலைவாணன்